சென்னைக்கு மதுராந்தம் ஏரி தண்ணீர் கிடையாது
சென்னை:
சென்னைக்கு தண்ணீர் வழங்கும் அளவுக்கு மதுராந்தகம் ஏரியில் தண்ணீர் இல்லை என்று நிபுணர்கள் குழுதெரிவித்துள்ளது.
சென்னையில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க சென்னை மாநகர குடிநீர் வாரியம் பல்வேறுநடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதில் ஒரு பகுதியாக மதுராந்தகம் ஏரியிலிருந்து லாரிகள் மூலம்தண்ணீர் எடுக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கு மதுராந்தகம் பகுதி விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
மதுராந்தகம் ஏரி மூலம் 15,000 ஏக்கர் நிலம் பாசன வசதி பெற்று வருகிறது. விவசாயத்திற்குப் போக சென்னைக்குவழங்க உபரி நீர் உள்ளதா என்பதை ஆராய 4 பேர் அடங்கிய நிபுணர்கள் குழு ஒன்றை காஞ்சிபுரம் மாவட்டஆட்சியர் வெங்கடேசன் நியமித்தார்.
இக் குழுவினர் ஏரியைப் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பின்னர் விவசாயிகளைச் சந்தித்து அவர்களின்கருத்துக்களைக் கேட்டனர். இறுதியில் தங்கள் ஆய்வறிக்கையை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினர்.
அதில், மதுராந்தகம் ஏரியில் போதுமான அளவு நீர் இருப்பு இல்லை. 609 அடி கொள்ளளவு உள்ள ஏரியில்இப்போது 220 அடியளவே நீர் உள்ளது. இந்த நீர் மதுராந்தகம் பகுதி விவசாயத்திற்கே போதுமானதாக இருக்காது.எனவே சென்னைக்கு குடிநீர் வழங்க சாத்தியமில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை?












Click it and Unblock the Notifications