சென்னை மாநகராட்சி: காங். கவுன்சிலர்கள் குண்டுகட்டாக வெளியேற்றம்
சென்னை:
சென்னை மாநகராட்சிக் கூட்டத்திலிருந்து காங்கிரஸ் கட்சிக் கவுன்சிலர்கள் குண்டுக் கட்டாக தூக்கி வெளியேற்றப்பட்டனர்.இதைக் கண்டித்து திமுக கவுன்சிலர்கள் வெளிநடப்புச் செய்தனர்.
சென்னை மாநகராட்சி அவைக் கூட்டம் இன்று நடந்தது. அதில் பேசிய துணை மேயர் கராத்தே தியாகராஜன், முன்னாள் மத்தியஅமைச்சர் டி.ஆர். பாலு குறித்தும், திமுக- காங்கிரஸ் தேர்தல் கூட்டணி குறித்தும் வாய்க்கு வந்தபடி பேசினார்.
இதற்கு காங்கிரஸ் கவுன்சிலர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். துணை மேயரை எதிர்த்துக் கோஷமிட்டனர். இதையடுத்துஅவர்களை அவையிலிருந்து வெளியேற்றுமாறு கராத்தே உத்தரவிட்டார்.
இதைத் தொடர்ந்து மாநகராட்சி காங்கிரஸ் தலைவர் ராயபுரம் மனோ உள்ளிட்ட 8 கவுன்சிலர்களும் குண்டுக்கட்டாக அவையில்இருந்து தூக்கிச் செல்லப்பட்டு, வெளியேற்றப்பட்டார்கள்.
இதைக் கண்டித்து திமுக உறுப்பினர்கள் தலைவர் சி.வி.மலையன் தலைமையில் வெளிநடப்புச் செய்வதாகக் கூறி வெளியேறினர்.இதனால் அவையின் கூட்டம் பெரும் பரபரப்புடன் காணப்பட்டது.
-
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை?












Click it and Unblock the Notifications