ஜெ. ஊழல்களை விசாரிக்க அமைக்கப்பட்ட தனி நீதிமன்றத்துக்கு மூடுவிழா
சென்னை:
ஜெயலலிதா, மற்றும் அதிமுக அமைச்சர்கள் மீதான ஊழல் வழக்குகளை விசாரிக்க அமைக்கப்பட்ட சென்னை தனிநீதிமன்றத்தின் ஆயுட்காலம் வருகிற 30ம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து அந்த நீதிமன்றத்தை மூடிவிடலாம் என்று சென்னை உயர் நீதிமன்றம் தமிழக அரசுக்கு பரிந்துரைத்துள்ளது.
கடந்த திமுக ஆட்சிக்காலத்தின்போது, முதல்வர் ஜெயலலிதா, அவரது அமைச்சர்கள், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்.அதிகாரிகள் மீது தனி நீதிமன்றத்தில் ஊழல் வழக்குகள், சொத்துக் குவிப்பு வழக்குகள் தொடரப்பட்டன. மொத்தம்3 நீதிமன்றங்கள் தொடக்கத்தில் அமைக்கப்பட்டன.
2-வது முறையாக அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகு அதில் இரண்டு நீதிமன்றங்களை அரசு மூடி விட்டது. நீதிபதிராஜமாணிக்கம் தலைமையிலான ஒரு நீதிமன்றம் மட்டுமே செயல்பட்டு வந்தது.
பல்வேறு பரபரப்பான தீர்ப்புகளை வெளியிட்ட இந்த தனி நீதிமன்றத்தின் ஆயுள்காலம் வருகிற 30ம் தேதியுடன்முடிவடைகிறது. நீதிபதி ராஜமாணிக்கத்தின் பதவிக் காலம் 31ம் தேதியுடன் முடிகிறது. இந் நிலையில் தனிநீதிமன்றத்தை மூடி விடலாம் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் பரிந்துரை செய்து கடிதம்எழுதியுள்ளது.
தற்போது தனி நீதிமன்றத்தில் 3 வழக்குகள் மட்டுமே நிலுவையில் உள்ளன. முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரிமீதான இலவச செருப்பு வழங்கியதில் ஊழல் வழக்கு கிட்டத்தட்ட முடியும் நிலையில் உள்ளது. சாட்சிகள் விசாரணைமுடிந்து, குறுக்கு விசாரணை முடிந்து, அரசுத் தரப்பு விவாதமும் முடிந்து விட்டது. எதிர்த்தரப்பு விவாதம் நடந்துவருகிறது.
முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன் மற்றும் முன்னாள் தேனி எம்.எல்.ஏ. பன்னீர் செல்வம் ஆகியோர் மீது தலாஒரு சொத்துக் குவிப்பு வழக்கும் நிலுவையில் உள்ளது. இந்த வழக்குகளில் குற்றச்சாட்டுக்கள் தாக்கல்செய்யப்பட்டுள்ளன.
இதுதவிர 15 வழக்குகளில் முதல் தகவல் அறிக்கை மட்டுமே தாக்கல் செய்யப்பட்டுள்ளன. தனி நீதிமன்றம்மூடப்பட்டவுடன், இந்த 18 வழக்குகளும் சென்னை 8-வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்திற்கு மாற்றப்படும் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நீதிமன்றத்தில் நடந்து வந்தஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு கர்நாடக மாநிலத்துக்குமாற்றப்பட்டுவிட்டன.
நீதிபதி ராஜமாணிக்கம் கடைசியாக ஸ்பிக் ஊழல் வழக்கில் ஜெயலலிதாவை விடுதலை செய்து தீர்ப்பளித்தார்என்பது நினைவுகூறத்தக்கது.


Click it and Unblock the Notifications
