ரூ.15.4 கோடி செலவில் மீனவர்களுக்கு இலவச வீடுகள்
சென்னை:
மீனவர்களுக்கு ரூ.15.4 கோடி மதிப்பில் 4,000 வீடுகளை இலவசமாக கட்டித் தர முதல்வர் ஜெயலலிதாஉத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
மீனவர்கள் தங்கள் குடும்பங்களோடு மன நிறைவுடன் வசித்திட இருப்பிட வசதி செய்து தரும் நோக்கத்துடன்,மொத்தம் 4,000 வீடுகளை ரூ. 15.4 கோடி ரூபாய் மதிப்பில் கட்டித் தர முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இந்த வீடுகள்மாவட்ட ஆட்சித் தலைவர்களின் நேரடிக் கண்காணிப்பில், ஊராட்சி ஒன்றியங்கள் மூலம் கட்டித் தரப்படும் என்றுதெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுக நேர்காணல் நாளை நிறைவு:
மாவட்டவாரியாக அதிமுக நிர்வாகிகளைச் சந்தித்து ஜெயலலிதா நடத்தி வந்த நேர்காணல் நிகழ்ச்சி நாளையுடன்முடிவடைகிறது. கடந்த டிசம்பர் மாதம் 19ம் தேதி சென்னையை அடுத்த கொளப்பாக்கத்தில் இந் நிகழ்ச்சிதொடங்கியது.
இதில் 5 லட்சத்திற்கும் அதிகமான தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளை ஜெயலலிதா சந்தித்துள்ளார். நாளைநெல்லை மாவட்ட நிர்வாகிகளின் சந்திப்புடன் நேர்காணல் முடிவடைகிறது. இதனையடுத்து வரும் 3ம் தேதிஅதிமுக செயற்குழு கூடுகிறது. அதிமுக-பா.ஜ.க. கூட்டணிக்கு வீரமணி எதிர்ப்பு
அதிமுக பா.ஜ.கவுடன் தேர்தல் கூட்டணி வைத்துள்ளதற்கு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி எதிர்ப்புதெரிவித்துள்ளார். மதச்சார்பற்று செயல்பட வேண்டும் என்ற பெரியார் கொள்கையின்படி, வரும் மக்களவைத்தேர்தலில் அதிமுக-பா.ஜ.க கூட்டணியை திராவிடர் கழகம் ஆதரிக்காது. யாருக்கு ஆதரவு தெரிவிப்பது என்பதைகழக பொதுக்குழு கூடி முடிவு செய்யும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
-
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை?












Click it and Unblock the Notifications