பா.ம.கவால் திமுக-காங். இடையே மோதல்: இருப்பினும் இன்று தொகுதி உடன்பாடு
சென்னை:
பாட்டாளி மக்கள் கட்சிக்கு பாண்டிச்சேரி தவிர, வட மாவட்டங்களில் உள்ள பெரும்பான்மையான தொகுதிகள்ஒதுக்கப்பட்டுள்ளதால் காங்கிரஸ் கட்சித் தலைவர்களிடையே கடும் கோபம் நிலவுகிறது.
காங்கிரஸ் தேர்தல் குழுவில் உள்ள மூத்த தலைவர்கள் சிலர் மூன்றாவது அணி அமைத்துப் போட்டியிடலாம் என்றுகூட கோரிக்கை வைக்க ஆரம்பித்துள்ளனர். இதையடுத்து அவர்களை டெல்லி தலைமையும், தமிழக காங்கிரஸ்பார்வையாளர் கமல்நாத்தும் அமைதிப்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர்.
இக் கூட்டத்தில் பேசிய திமுக ஆதரவு தலைவர்களோ, பாண்டிச்சேரி காங்கிரசார், குறிப்பாக அம் மாநில காங்கிரஸ்தலைவர் நாராயணசாமி ஆரம்பத்தில் இருந்தே திமுகவை மிகக் கடுமையாக விமர்சித்து வந்ததால் தான், அந்தத்தொகுதியை பா.ம.கவுக்குக் கொடுத்து நமக்கு கருணாநிதி பாடம் புகட்டியுள்ளார் என கருத்துத் தெரிவித்துள்ளனர்.
காங்கிரஸ் வசம் உள்ள வன்னிய இன வாக்குகள் அனைத்தும் பா.ம.கவுக்கே போகும் வகையில் வட மாவட்டத்தொகுதிகளை அக் கட்சிக்கே கொடுத்து நம்மை திமுக முதுகில் குத்திவிட்டதாக திண்டிவனம் ராமமூர்த்தி உள்ளிட்டவன்னிய இன காங்கிரஸ் தலைவர்கள் கூறியுள்ளனர்.
எப்படி இருந்தாலும் திமுக கூட்டணி உறுதி என்று கூறிவிட்ட கமல்நாத், 10 தொகுதிகளை திமுக கொடுத்தாலும்ஏற்கச் சொல்லிவிட்டது நம் தலைமை என்று கூறி பிரச்சனைக்கு முற்றுப் புள்ளி வைத்துள்ளார்.
திமுக கொடுக்கும் தொகுதிகளில் ஒழுங்காகப் போட்டியிட்டு, உழைத்து, ஒருவரை ஒருவர் காலை வாரிவிடாமல்,ஒற்றுமையாய் பாடுபட்டு அனைத்திலும் வெல்ல வேண்டியது உங்கள் கடமை என கமல்நாத் கூறியதாக அக்கூட்டத்தில் பங்கேற்ற மூத்த தலைவர் ஒருவர் நம் செய்தியாளரிடம் தெரிவித்தார்.
இதற்கிடையே தங்களுக்கு ஆதரவு அதிகமுள்ள 15 தொகுதிகளின் பட்டியலை காங்கிரஸ் கட்சி, திமுகவிடம்தந்துள்ளது. இதில் 12 தொகுதிகளையாவது திமுக ஒதுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.ஆனால், இதில் 10 தொகுதிகளை திமுக வழங்கும் என்று தெரிகிறது.
இன்று மீண்டும் திமுக தேர்தல் குழுவை சந்தித்து காங்கிரஸ் குழு பேச்சு நடத்தவுள்ளது. அப்போது தொகுதிகள்தொடர்பான உடன்பாடு ஏற்பட்டவுடன், தொகுதிப் பங்கீட்டில் இன்று மாலையே திமுக தலைவர் கருணாநிதியும்காங்கிரஸ் தரப்பில் கமல்நாத்தும் கையெழுத்திடுவர் என்று தெரிகிறது.
-
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
மாடு பலியிட தடை.. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்! அமைச்சர் ஷாஜஹான் உறுதி -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
5,000 பேர் மட்டும் தான்.. திருச்சி கிழக்கில் விஜய் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு












Click it and Unblock the Notifications