கல்பனா சாவ்லாவின் வெண்கல சிலை செதுக்கிய ஹூசைனி
சென்னை:
விண்வெளியில் பறந்த முதல் இந்திய பெண், மறைந்த கல்பனா சாவ்லாவின் ஆளுயர வெண்கலச் சிலையைஉருவாக்கியுள்ளார் பிரபல கராத்தே வீரர் ஷிஹான் ஹூசைனி.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ஹூசைனி கூறியதாவது:
கொலம்பியா விண்கலம் விண்ணில் வெடித்துச் சிதறியதை தொலைக்காட்சியில் பார்த்தேன். அப்போதேகல்பனாவை என்றும் நினைவில் நிறுத்தும்படியான நினைவுச் சின்னத்தை நிறுவ முடிவு செய்தேன்.
அதன்படி, இந்தச் சிலையைச் செதுக்க ஆரம்பித்தேன். கல்பனாவின் ஆளுயர சிலையை (5 அடி 4 அங்குலம்), 14அடி உயரமுள்ள கொலம்பியா விண்கலத்தின் மேல் நிற்பது போல் அமைத்துள்ளேன். அவரது வலது கை வானைநோக்கி உயர்ந்திருப்பது போல் செய்துள்ளேன்.
வீர தீர செயலுக்காக கல்பனா சாவ்லாவின் பெயரில் தமிழக அரசு வழங்கிய விருதுப் பணமான ரூ. 5 லட்சத்தை,முதன் முதலாக வாங்கிய எனது கராத்தே கல்லூரி மாணவி ரேஷ்மா சர்மா, அந்தப் பணம் முழுவதையும் இந்தச்சிலை செதுக்கும் பணிக்குத் தந்துள்ளார்.
இந்தச் சிலையை செய்து முடிக்க ரூ.8 லட்சம் செலவாகியுள்ளது. இதன் திறப்பு விழாவுக்கு முதல்வர் ஜெயலலிதாவைஅழைக்க முயற்சி செய்தேன். ஆனால் முடியவில்லை.
கொலம்பியா விண்கலம் வெடித்துச் சிதறிய நாளான பிப்ரவரி 1ம் தேதி (நாளை மறுநாள்) காலை 9 மணிக்குஇந்தச் சிலையை பொதுமக்களின் பார்வைக்கு வைக்கவுள்ளேன்.
இந்தச் சிலையை நிரந்தரமாக ஒரு இடத்தில் அமைப்பதற்கு முதல்வரிடம் விண்ணப்பம் செய்துள்ளேன் என்றார்.
-
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications