இன்று காங்கிரஸ்- திமுக தொகுதி உடன்பாடு
சென்னை:
திமுக தலைவர் கருணாநிதியை, அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் கமல்நாத் நேற்று மீண்டும் சந்தித்துதொகுதிப் பங்கீடு தொடர்பாக பேசினார். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து இரு கட்சிகளும் இன்று தொகுதிப்பங்கீட்டில் கையெழுத்திட உள்ளன.
காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், முன்னாள் தலைவர்கள் இளங்கோவன், குமரி அனந்தன், திண்டிவனம்ராமமூர்த்தி, சட்டசபை காங்கிரஸ் தலைவர் எஸ்.ஆர்.பாலசுப்ரமணியம் ஆகியோருடன் நேற்று காலை அண்ணாஅறிவாலயம் சென்றார் கமல்நாத்.
அவர்கள் கருணாநிதி, அன்பழகன், ஸ்டாலின், தயாநிதி மாறன், துரைமுருகன், ஆற்காடு வீராசாமி ஆகியோருடன்பேச்சு நடத்தினர். சுமார் ஒரு மணி நேரம் நடந்த இந்தப் பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம்பேசிய கமல்நாத்,
தொகுதிப் பங்கீடு தொடர்பாக பேசி முடிவு செய்துவிட்டோம். பேச்சுவார்த்தை மிக மிக சுமூகமானதாக இருந்தது.பாண்டிச்சேரி தொகுதி குறித்தும் பேசினோம். ஆனால், அது குறித்து பிரச்சனை ஏதும் எழவில்லை. தொகுதிப்பங்கீட்டின்போது இதுபோன்ற பிரச்சினைகள் எழுவது சகஜம்தான்.
நாளை(இன்று) மீண்டும் திமுக தலைவர் கருணாநிதியை நாங்கள் நேரில் சந்தித்துப் பேச உள்ளோம். அப்போதுகாங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் விவரம் வெளியாகும். தொகுதிப் பங்கீடும் நாளையேமுடிவடைந்துவிடும். கருணாநிதியை சந்திக்கும் முன் தமிழக காங்கிரஸ் தேர்தல் குழுவின் கூட்டமும் கூட்டப்படும்.
எத்தனை தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிடுகிறது என்பது முக்கியமல்ல. திமுக தலைமையிலான கூட்டணிஅனைத்துத் தொகுதிகளிலும் வெல்ல வேண்டும் என்பது தான் முக்கியம். இதன் மூலம் பா.ஜ.க.- அதிமுகவுக்குசரியான பாடம் புகட்டுவோம் என்றார்.
பாண்டிச்சேரியை மீண்டும் காங்கிரசுக்கு ஒதுக்கக் கோரி கருணாநிதியிடம் கமல்நாத் தலைமையிலான காங்கிரசார்கோரிக்கை வைத்தும் அதை திமுக ஏற்கவில்லை. பா.ம.க. ஆதரவுடன் திமுக எம்.எல்.ஏக்களும் வாக்களித்து ஒருகாங்கிரஸ் வேட்பாளரை ராஜ்யசபா எம்.பியாக்குவதாக கமல்நாத்திடம் கருணாநிதி உறுதியளித்துள்ளார்.
இதையடுத்து பாணடிச்சேரி குறித்து பேசுவதை காங்கிரஸ் இன்றுடன் நிறுத்திக் கொள்ளும் என்று தெரிகிறது. அதேநேரத்தில் 14 தொகுதிகளாவது தங்களுக்கு ஒதுக்கப்பட வேண்டும் என காங்கிரஸ் கோரி வருகிறது. ஆனால்,அதிகபட்சமாக 10 மட்டுமே சாத்தியம் என திமுக கூறிவிட்டது.
இந் நிலையில் திமுக தலைமையுடன் காஙகிரஸ் தலைவர் சோனியா காந்தியும் நேரடியாகப் பேசி வருகிறார். இடப்பங்கீடு குறித்தும் கருணாநிதியும், சோனியாவும் தொலைபேசி மூலம் பேசி முடிவு செய்துவிட்டதாகத் தெரிகிறது.இதையடுத்து இன்று தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது.
இதற்கிடையே வரும் பிப்ரவரி 21, 22ம் தேதிகளில் விருதுநகரில் நடக்கவுள்ள திமுகவின் தென் மண்டலமாநாட்டில் கூட்டணிக் கட்சித் தலைவர்களும் பங்கேற்பார்கள் என கருணாநிதி அறிவித்துள்ளார். இதில் சோனியாகாந்தியும் பங்கேற்கலாம் என்று தெரிகிறது.
-
அண்ணாமலைக்கு, விஜய் கொடுத்த நம்பிக்கை! பாஜகவிற்கு ‘குட்பை' கூறி புது கட்சி தொடங்குவது ஏன்? பின்னணி -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை?












Click it and Unblock the Notifications