சோ மூலம் சிதம்பரத்துக்கு சீட் கேட்கும் ரஜினி
சென்னை:
மக்களவைத் தேர்தலுக்கு காங்கிரஸ் ஜனநாயகப் பேரவையின் பொதுச் செயலாளர் ப.சிதம்பரத்துக்கு ஒரு தொகுதிஒதுக்கித் தரும்படி தமிழக காங்கிரஸ் தலைவர் வாசனிடம் நடிகர் ரஜினிகாந்த் சிபாரிசு செய்துள்ளார். இதுதொடர்பாக துக்ளக் ஆசிரியர் சோ மூலமாக அவர் வாசனிடம் பேசியுள்ளார்.
திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு 10 இடங்கள் ஒதுக்கப்படலாம் என்று தெரிகிறது. அதில்ஒரு இடத்தை சிதம்பரத்துக்கு ஒதுக்கிக் கொள்ளுமாறு திமுக கூறியுள்ளது. இதற்கு சோனியா காந்தி தயார் தான்என்றாலும் வாசன் உள்ளிட்ட பிற காங்கிரஸ் தலைவர்களுக்கு இதில் உடன்பாடில்லை.
கிடைப்பதே 10. இதில் ஒன்றை அவருக்குத் தூக்கித் தருவதா என்று காங்கிரஸிஸ் முணுமுணுப்பு எதிர்ப்புகிளம்பியுள்ளது. இதனை அறிந்த சிதம்பரம் ரஜினியை அணுகியுள்ளார். ரஜினி தரப்பில் சோவிடம் இது குறித்துப்பேசப்பட்டது.
இதையடுத்து வாசனை நேரில் அழைத்துப் பேசிய சோ, ரஜினி தரப்பிலிருந்து தனக்கு வந்திருக்கும் சிபாரிசுகுறித்து எடுத்துச் சொன்னதாகவும், ஆனால் வாசனிடமிருந்து இதற்கு சாதகமான பதில் கிடைக்கவில்லை என்றும்தெரிகிறது.
அதேநேரத்தில், வாசன் சோவைச் சந்தித்துப் பேசியதில் திமுக தரப்பு கடுப்பாகியுள்ளது. திமுக தலைவர்கருணாநிதியைத் தொடர்ந்து விமர்சித்து வரும் சோவை இந்த நேரத்தில் வாசன் சந்தித்துள்ளது திமுகவுக்குதெரியவந்ததும் அறிவாலயத்தில் கோபம் கொப்பளித்தது.
ரஜினி, சிதம்பரம் விஷயம் தவிர, திமுக கூட்டணி விஷயம் குறித்தும் சோவிடம் வாசன் ஆலோசனைகேட்டதாகவும் திமுக தலைமை கருதுகிறது. ஏற்கனவே வாசன் மீது திமுக சந்தேகப் பார்வையில் இருந்து வருவதுகுறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே சோனியாவே 10 இடங்களை ஒப்புக் கொள்ளத் தயாராக இருக்கும்போது, அவரிடம் ஜெயந்திநடராஜன் மூலமாக இல்லாததையும், பொல்லாததையும் சொல்லி மேலும் 2 இடங்கள் கேட்கச் சொல்லிவற்புறுத்தியதே வாசன் தான் எனவும் திமுக நினைக்கிறது.
-
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
மாவட்ட வாரியாக பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்.. சென்னைக்கு ஆதவ் அர்ஜுனா.. முதல்வர் விஜய் மேஜர் உத்தரவு -
உடனே வாங்க.. அதிகாரிகளை மீட்டிங் ரூமிற்கு அழைத்த விஜய்.. துளைச்சு எடுத்துட்டாரே.. வாத்தி ரெய்டு! -
ராஜ்ய சபா தேர்தல்.. காய் நகர்த்தும் காங்கிரஸ்.. கிரிஷ் சோடங்கர் சொன்ன முக்கிய பாய்ண்ட்! -
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
விஜய்: எந்த பயனும் இல்லை.. பிடிங்க.. நீங்க கொடுத்த ரூ.5000 + 1 ரூபாய்.. ஈரோடு விவசாயிகள் அதிரடி!











Click it and Unblock the Notifications