பொடா வழக்குகளில் மறு ஆய்வுக் குழு தீர்ப்பு வழங்க முடியாது: தமிழக அரசு
சென்னை:
பொடா வழக்குகளை விசாரிக்க நியமிக்கப்பட்டுள்ள சிறப்பு நீதிமன்றங்களில் தொடரப்பட்ட வழக்குகளில்தலையிடவும், அதில் தீர்ப்பு கூறவும், பொடா மறு ஆய்வுக் குழுவுக்கு அதிகாரம் இல்லை என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் வாதாடினார்.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்ட பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களின்வழக்குகளைப் பரிசீலனை செய்ய பொடா மறு ஆய்வுக் குழுவை மத்திய அரசு அமைத்தது. இந்த குழுவுக்குகூடுதல் அதிகாரம் வழங்கி மத்திய அரசு சட்டத் திருத்தத்தையும் கொண்டு வந்தது.
பொடா மறு ஆய்வுக்குழு, வைகோ விவகாரத்தை விசாரிக்கும் அதிகாரம் கொண்டதல்ல, வழக்கு தொடர்பானஆவணங்களை அது கோரிப் பெற முடியாது என்று பொடா ஆய்வுக் குழுவிடம் தமிழக அரசு தெரிவித்தது.ஆனால் தமிழக அரசின் கோரிக்கையை பொடா மறு ஆய்வுக் குழு நிராகரித்தது.
இந் நிலையில், பொடா மறு ஆய்வுக் குழுவுக்கு கூடுதல் அதிகாரம் வழங்க வகை செய்யும் பொடா சட்டத்தின்60-வது பிரிவை ரத்து செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்துள்ளது.
இந்த ரிட் மனு விசாரணைக்கு வந்தபோது, நீதிபதி ரவிராஜபாண்டியன் வழக்கின் முக்கியத்துவம் கருதி இந்தமனுவை விசாரிக்குமாறு முதல் டிவிஷன் பெஞ்சுக்கு உத்தரவிடுவதாகக் கூறினார். பின்னர் இந்த மனுவை தலைமைநீதிபதி சுபாஷன் ரெட்டி, நீதிபதி சர்தார் ஜக்காயா ஹூசேன் ஆகியோர் கொண்ட முதல் டிவிஷன் பெஞ்ச்விசாரித்தது.
அப்போது அரசு உதவி தலைமை வழக்கறிஞர் வி.டி.கோபாலான் வாதாடுகையில், பொடா வழக்குகளை விசாரிக்கநியமிக்கப்பட்டுள்ள சிறப்பு நீதிமன்றங்களின் செயல்பாடுகளில் தலையிட பொடா மறு ஆய்வுக்குழுவுக்குஅதிகாரம் இல்லை.
பொடா மறு ஆய்வுக் குழு ஒரு நிர்வாக அமைப்புதான். நீதிமன்றத்தில் உள்ள வழக்கில் தீர்ப்பு கூறவோ, தீர்ப்பைரத்து செய்யவோ இந்த அமைப்புக்கு அதிகாரம் கிடையாது. எனவே நீதிமன்றத்தையும், சட்டத்தையும் உலுக்கும்வகையில் கொண்டு வரப்பட்டுள்ள பொடா சட்டத்தின் 60-வது பிரிவை ரத்து செய்ய வேண்டும் என்றுவாதாடினார்.
வைகோ சார்பில் மூத்த வழக்கறிஞர் கே.சந்துரு ஆஜரானார்.
-
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications