சோனியாவுக்கு பா.ம.க முழு ஆதரவு
சென்னை & பாண்டிச்சேரி:
இந்தியரான ராஜிவ் காந்தியை மணந்த சோனியா காந்தியும் ஒரு இந்தியர் தான். இதனால் அவர் பிரதமராகஎந்தவிதமான அரசியல் சட்டப் பிரச்சனையும் இல்லை என பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர்ராமதாஸ் கூறியுள்ளார்.
அதே நேரத்தில் பாண்டிச்சேரி தொகுதியை காங்கிரசுக்கு விட்டுக் கொடுக்கும் பேச்சுக்கே இடமில்லை என்றார்.அங்கு பா.ம.க. நிச்சயம் போட்டியிடும் என்ற அவர், மத்தியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில்ஆட்சி அமைய பா.ம.க. பாடுபடும் என்றும் கூறினார்.
சென்னையில் இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், பாரம்பரியம் மிக்க நேரு குடும்பத்தைச் சேர்ந்தவர்சோனியா. இந்திரா காந்தியின் மருமகள். அவர் பிறந்தது வெளிநாட்டில் இருந்தாலும் இப்போது அவர் ஒருஇந்தியர், இதனால் அவர் பிரதமராக எந்தத் தடையும் இல்லை.
அவரை வெளிநாட்டவர் என்று சொல்லி பிரச்சாரம் செய்து வரும் சிலரின் முகத்தில் கரியைப் பூச அவர்தலைமையிலான ஆட்சியை அமைக்க பா.ம.க. தயாராகவே உள்ளது. காங்கிரஸை மீண்டும் ஆட்சியில் அமர்த்தவேண்டும் என்று தான் பா.ஜ.க. கூட்டணியை விட்டே வெளியே வந்தோம்.
பாண்டிச்சேரியில் நடக்கும் காங்கிரஸ் உட்கட்சிப் பிரச்சனைக்கும், அந்தத் தொகுதியை பா.ம.கவுக்குஒதுக்கியதையும் சில பத்திரிக்கைகள் முடிச்சு போட்டு விஷமப் பிரச்சாரம் செய்கின்றன என்று கூறியுள்ளார்ராமதாஸ்.
முன்னதாக தனிப்பட்ட பயணமாக பாண்டிச்சேரி வந்த அவர், தமிழகம், பாண்டிச்சேரியில் ஜனநாயக முற்போக்குக்கூட்டணி வெற்றி பெற வேண்டும். மத்தியில் சோனியா காந்தி தலைமையில் ஆட்சியமைய வேண்டும். இதற்காகபா.ம.க. முழு மூச்சுடன் பாடுபடும்.
பாண்டிச்சேரியில் நாங்கள் தான் போட்டியிடுவோம் அதில் மாற்றமில்லை என்றார். இதன் மூலம் பாண்டிச்சேரிதொடர்பான ராமதாசுடன் காங்கிரஸ் தலைவர்கள் சிலர் நடத்திய பேச்சு வெற்றி பெறவில்லை என்பதுதெளிவாகிறது.
பாண்டிச்சேரி காங்கிரசாரை அமைதிப்படுத்தும் வகையில் திமுக யோசனையின்படிதான் சோனியா தலைமையில்ஆட்சி அமைய பாடுபடப் போவதாக ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளதாகக் கருதப்படுகிறது.
மத்தியில் பா.ஜ.க. வென்று ஆட்சியமைக்கும் நிலையில் மீண்டும் ராமதாஸ் அங்கே போய்விடுவார் என்றேகூட்டணிக் கட்சிகள் கூட எதிர்பார்க்கின்றன.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications