ரூ.127 கோடியில் சென்னை-மகாபலிபுரம் 6 வழிச்சாலை
சென்னை:
தகவல் தொழில் நுட்ப வளர்ச்சிக்காக சென்னையிலிருந்து மகாபலிபுரம் வரை 6 வழிச்சாலையை அமைக்க முதல்வர்ஜெயலலிதா அனுமதி அளித்துள்ளார்.
இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
அடையாரில் உள்ள மத்திய கைலாஷில் இருந்து டைடல் பார்க், சிறுசேரி வழியாக மகாபலிபுரம் வரை ரூ.127.41கோடி மதிப்பில் இந்தச் சாலை அமைக்கப்படும். அடுத்தாண்டு இறுதிக்குள் இப் பணியை நிறைவேற்றஉத்தரவிடப்பட்டுள்ளது.
சாலையின் முழுநீளத்துக்கு நடைபாதை அமைக்கப்படும். நடைபாதைக்குக் கீழே மூடப்பட்ட மழைநீர்க் கால்வாய்அமைக்கப்படும். மின்சாரம், தொலைபேசி கண்ணாடி இழைக் கம்பிவடங்கள் செல்ல தனியாக சேவைக் குழாய்கள்அமைக்கப்படும். இதனால் வருங்காலத்தில் சாலையை தோண்ட அவசியம் இராது.
இத்திட்டத்தை தகவல் தொழில் நுட்ப துரித வழிச்சாலை நிறுவனம் (ஐடெல்) செயல்படுத்தும் என்றுதெரிவிக்கப்பட்டுள்ளது. சாப்ட்வேர் நிறுவனங்கள் அதிகம் அமைந்துள்ள இப் பகுதியில் போக்குவரத்துநெரிசலைத் தவிர்ப்பதோடு, வேகமான போக்குவரத்துக்கும் வழி செய்யவே இத் திட்டம்அமலாக்கப்படுவதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
கம்ப்யூட்டர்மயமாகும் அரசு துறைகள்:
தமிழக அரசுத் துறைகள் முழுவதும் கம்ப்யூட்டர்மயமாக்கப்படுகிறது.
இதற்காக, தமிழக அரசின் எல்காட் நிறுவனம் ஆரக்கிள் இந்தியா நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது. இதன்மூலம் தலைமைச் செயலகம் முதல் குக்கிராமம் வரை ஒருங்கிணைக்கப்படும்.
-
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்!












Click it and Unblock the Notifications