கருணாநிதியுடன் கமல்நாத் இன்று மீண்டும் சந்திப்பு
சென்னை:
திமுக தலைவர் கருணாநிதியை காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் கமல்நாத், மேலிடப் பிரதிநிதி தில்ஜித் சிங் ஆகியோர்இன்று மீண்டும் சந்தித்துப் பேச்சு நடத்தினர். முன்னதாக தமிழக காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தலைமையிலான காங்கிரஸ்குழு திமுக தேர்தல் குழுவை சந்தித்துப் பேசியது.
இதனால் இரு கட்சிகளுக்கு இடையிலான கருத்து வேறுபாடுகளுக்கு இடையிலும் இன்றே தொகுதி உடன்பாடு ஏற்பட்டுவிடும்என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பாண்டிச்சேரி மற்றும் தொகுதிகளின் எண்ணிக்கை தொடர்பாக திமுக, காங்கிரஸ் இடையே தொகுதிப் பங்கீடு செய்து கொள்வதில்சிக்கல் நீடித்து வந்தது. இந் நிலையில் இரு கட்சிகளின் தேர்தல் குழுவினர் இன்று அண்ணா அறிவாலயத்தில் சந்தித்துப் பேச்சுநடத்தினர்.
இந்தப் பேச்சுவார்த்தையின்போது திமுக சார்பில் ஸ்டாலின், ஆற்காடு வீராசாமி, டி.ஆர்.பாலு, கோ.சி.மணி, துரைமுருகன்,வீரபாண்டி ஆறுமுகம் ஆகியோரும், காங்கிரஸ் சார்பில் ஜி.கே.வாசன், இளங்கோவன், சோ.பாலகிருஷ்ணன், தங்கபாலு, ஜெயந்திநடராஜன், மணிசங்கர அய்யர், குமரி அனந்தன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதில் கருணாநிதி பங்கேற்கவில்லை.
பேச்சுவார்த்தைக்குப் பின் செய்தியாளர்களிடம் வாசன் பேசுகையில், பேச்சுவார்த்தையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.தொகுதி பங்கீடு தொடர்பாக இரு கட்சிகளுக்கும் இடையே உடன்பாடு ஏற்பட்டுள்ளது. தேவைப்பட்டால் திமுகவுடன் மீண்டும்பேசப்படும். புதுவை தொகுதி தொடர்பாக அகில இந்திய காங்கிரஸ் மேலிடம் தான் முடிவு எடுக்கும் என்றார்.
புதுவைக்கு பதில் மயிலாடுதுறை:
புதுவைக்குப் பதில் பாமகவுக்கு மயிலாடுதுறையைக் கொடுப்பதாக காங்கிரஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளதாக தெரிகிறது.இப்போதைய மயிலாடுதுறை எம்.பியான மணிசங்கர் அய்யர் தனது தொகுதியை பா.ம.கவுக்கு விட்டுத் தர முன்வந்திருப்பதாகவும், அவரை திமுக-பா.ம.க. எம்.எல்.ஏக்கள் வாக்களித்து ராஜ்யசபா எம்.பியாக்கலாம் என்றும் காங்கிரஸ்யோசனை கூறியுள்ளது.
இருப்பினும் இதுதொடர்பாக திமுக, பா.ம.கவின் நிலை தெரியவில்லை.
கருணாநிதி- கமல் நாத் சந்திப்பு:
இந் நிலையில் இன்று மீண்டும் சென்னை வந்த காங்கிரஸ் பொதுச் செயலாளர் கமல்நாத், கருணாநிதியை அறிவாலயத்தில்சந்தித்துப் பேச்சு நடத்தினார்.
கருணாநிதிக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டதையடுத்து பாதியிலேயே அவர் எழுந்து சென்றுவிட்டார். இதையடுத்து திமுக தேர்தல்குழுவினருடன் கமல்நாத் ஆலோசனை நடத்தி வருகிறார். இதைத் தொடர்ந்து இன்றே தொகுதி உடன்பாடும் ஏற்பட்டுவிடும் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் கூட்டணியில் சிக்கல் ஏதும் இல்லை.யாருடைய வெற்றி என்பது இப்போது முக்கியமல்ல. கூட்டணி வெற்றி பெற வேண்டும். அதற்காகத்தான் அனைவரும்பாடுபட்டுக் கொண்டிருக்கிறோம்.
திமுகவுடனான தொகுதிப் பங்கீடு முழுமை அடைந்த பின்னர் சோனியா காந்தி சென்னை வருவார். அண்ணா நினைவு நாளான 3ம்தேதி சோனியா சென்னை வந்து திமுக நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டும் என்று திமுகவின் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
ஆனால், அன்று நாடாளுமன்றத்தி இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதால் எதிர்க் கட்சித் தலைவர் என்ற முறையில்அவர் அவையில் இருக்க வேண்டியிருப்பதால் இன்னொரு நாளில் சோனியா கட்டாயம் வருவார் என்றார்.
இதன் பின்னர் அண்ணா அறிவாலயம் புறப்பட்டுச் சென்ற கமல்நாத், வாசனை உடன் அழைத்துச் செல்லாமல் கருணாநிதிக்குநெருக்கமான இளங்கோவனை உடன் அழைத்துச் சென்றார்.
-
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
அண்ணாமலைக்கு, விஜய் கொடுத்த நம்பிக்கை! பாஜகவிற்கு ‘குட்பை' கூறி புது கட்சி தொடங்குவது ஏன்? பின்னணி -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக












Click it and Unblock the Notifications