போயஸ் கார்டனில் அத்வானிக்கு நாளை ஜெ. விருந்து
சென்னை:
நாளை சென்னை வரும் துணைப் பிரதமர் அத்வானிக்கு முதல்வர் ஜெயலலிதா விருந்து கொடுக்கிறார். அப்போது வரும்தேர்தலில் தொகுதி உடன்பாடு குறித்து இருவரும் பேச்சு நடத்தவுள்ளனர்.
அண்ணா பல்கலைக்கழகத்தில் நடக்கும் ஒரு விழாவில் பங்கேற்க வரும் அத்வானிக்கு தனது போயஸ் கார்டன் இல்லத்தில் இந்தஇரவு விருந்தை அளிக்கிறார் ஜெயலலிதா.
அதிமுக-பாஜக குழுக்கள் சந்திப்பு:
இதற்கிடையே நாடாளுமன்றத் தேர்தல் தொகுதிப் பங்கீடு தொடர்பாக அதிமுக மற்றும் பா.ஜ.க. தேர்தல் குழுக்கள் இன்று சந்தித்துஆலோசனை நடத்தின.
பொதுப்பணித்துறை அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தலைமையிலான அதிமுக தேர்தல் குழுவும், சி.பி.ராதாகிருஷ்ணன்தலைமையிலான பா.ஜ.க. தேர்தல் குழுவும் இன்று சென்னை லாயிட்ஸ் சாலையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில்சந்தித்துப் பேசின.
சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நடந்த இந்தக் கூட்டம் நடந்தது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராதாகிருஷ்ணன்,பேச்சுவார்த்தை சுமூகமாக இருந்தது. மீண்டும் ஓரிரு நாட்களில் சந்திக்கவுள்ளோம். அதற்குப் பிறகுதான் தொகுதிகள் இறுதிசெய்யப்படும் என்றார்.
அதிமுக பொதுக் குழு தேதி மாற்றம்:
இதற்கிடையே அதிமுக பொதுக் குழு, செயற்குழுக் கூட்டங்கள் பிப்ரவரி 3ம் தேதிக்குப் பதிலாக 4ம் தேதி மாலை நடைபெறும்என்று கட்சியின் பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
அதிமுக நிர்வாகிகளுடன் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக சென்னையை அடுத்த கொளப்பக்காத்தில் நேர்காணல் நடத்தினார்முதல்வர் ஜெயலலிதா. இதையடுத்து வரும் பிப்ரவரி 3ம் தேதி கட்சியின் செயற்குழு மற்றும் பொதுக் குழுக் கூட்டத்தை நடத்தத்திட்டமிட்டிருந்தார்.
இக் கூட்டத்தில் பா.ஜ.கவுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் பற்றிய அறிவிப்பையும் ஜெயலலிதா வெளியிடுவார் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது.
இந் நிலையில் இக் கூட்டத்தை 4ம் தேதிக்கு ஜெயலலிதா ஒத்தி வைத்துள்ளார்.
-
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய்












Click it and Unblock the Notifications