இங்கே பிரச்சனை ஏதும் இல்லையே என்கிறார் புதுவை முதல்வர்
பாண்டிச்சேரி:
பாண்டிச்சேரி காங்கிரஸ் அரசுக்கு எந்தவித மிரட்டலும் இல்லை. ஆட்சிக்கு எந்தவித ஆபத்தும் இல்லை என்று அம் மாநிலமுதல்வர் ரங்கசாமி கூறியுள்ளார்.
காங்கிரஸ் தொகுதியான பாண்டிச்சேரி பா.ம.கவுக்கு ஒதுக்கப்பட்டதைக் காரணம் காட்டி, கட்சியில் இருந்து விலகினார் மூத்ததலைவர் கண்ணன். அதிமுக-பா.ஜ.க. ஆதரவோடு எம.பி. தொகுதியில் போட்டியிட அவர் முடிவு செய்துள்ளார். பா.ஜ.கவில்இணையவும் திட்டமிட்டுள்ளதாக செய்தி பரப்பி வருகிறார். அவரது இரு ஆதரவு அமைச்சர்களும் பதவிகளைத் துறந்துள்ளனர்.
இதற்கிடையே, முதல்வர் பதவியில் இருந்து ரங்கசாமியை நீக்கிவிட்டு தனது ஆதரவாளரான வைத்தியலிங்கத்தைமுதல்வராக்கினால் மீண்டும் காங்கிரசில் இணையவதாகவும் கூறியுள்ளார்.
இந் நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் ரங்கசாமி, எனது அரசுக்குப் பெரும்பான்மை பலம் உள்ளது. எனவேசட்டசபையில் எனது அரசின் பலத்தை நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை. 30 பேர் கொண்ட சட்டசபையில் 19எம்.எல்.ஏக்கள் காங்கிரஸ் அரசுக்கு ஆதரவாக உள்ளனர்.
அமைச்சர்கள் லட்சுமி நாராயணன், ஏழுமலை ஆகியோர் அனுப்பியுள்ள ராஜினாமா கடிதங்கள் மீது இன்னும் நான் நடவடிக்கைஎடுக்கவில்லை. நிலவரம் குறித்து கட்சி மேலிடத்திற்குத் தெரிவித்துள்ளேன்.
இந்த அரசியல் குழப்பம் விரைவில் தீர்ந்து விடும். அதேபோல, பாட்டாளி மக்கள் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட பாண்டிச்சேரிநாடாளுமன்றத் தொகுதியும் காங்கிரஸுக்குக் கிடைக்கும்.
அது தொடர்பான நடவடிக்கையில் கட்சி மேலிடம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது என்றார்.
-
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய்












Click it and Unblock the Notifications