காங்கிரஸுக்கு 10 சீட்; அதிருப்தியில் கமல்நாத்
சென்னை:
திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு10 சீட்களை திமுக ஒதுக்கியுள்ளது. ஆனால் தொகுதிப்பங்கீட்டில் திமுக நடந்து கொண்ட விதம் அதிருப்தி தந்ததால், திமுக தலைவர் கருணாநிதியை மீண்டும் சந்திக்காமல்டெல்லி திரும்பினார் அகில இந்திய பொதுச் செயலாளர் கமல்நாத்.
திமுக, காங்கிரஸ் இடையே நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் கூட்டணி ஏற்பட்டுள்ளது. வருகிறநாடாளுமன்றத் தேர்தலை இரு கட்சிகளும் இணைந்து சந்திக்கவுள்ளன. இந்தக் கூட்டணியில் பா.ம.க, மதிமுக,இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய தேசிய லீக், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகள்உள்ளன.
திமுக கூட்டணியில் பா.ம.கவுக்கு முதலில் தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. அக்கட்சிக்கு 6 இடங்கள்கொடுக்கப்பட்டுள்ளது. அதற்கு அடுத்ததாக இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு வேலூர் தொகுதி தரப்பட்டது.மற்ற கட்சிகளுக்குரிய இடங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடந்தது.
இதில், பாண்டிச்சேரி தொகுதியை பா.ம.கவுக்கு கொடுத்ததால், அந்தத் தொகுதியில் காலம் காலமாக ஜெயித்துவந்த காங்கிரஸ் கட்சி அதிருப்தி அடைந்தது. இதனால் காங்கிரஸ் கட்சியுடனான பேச்சுவார்த்தை முழுமைபெறாமல் இருந்து வந்தது.
மன்மோகன் சிங், கமல்நாத் போன்றோர் இதுவரை நான்கு முறை திமுக தலைமையுடன் பேசி விட்டனர். இந்நிலையில் நேற்று திமுக மற்றும் காங்கிரஸ் தேர்தல் குழுக்கள் சந்தித்துப் பேசின. பேச்சுவார்த்தையின்போதுஉடன்பாடு ஏற்பட்டு விட்டதாக பின்னர் காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்தார்.
தேர்தல் குழுக்களின் சந்திப்பைத் தொடர்ந்து திமுக தலைவர் கருணாநிதியை, அகில இந்திய பொதுச் செயலாளர்கமல்நாத் அறிவாலயத்தில் சந்தித்துப் பேசினார். இந்தப் பேச்சுவார்த்தைக்குப் பிறகு தொகுதிப் பங்கீடு இறுதியாகிவிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தொகுதிகளின் எண்ணிக்கைதான் இறுதியானதே தவிர எந்தெந்ததொகுதிகள் என்பது முடிவு செய்ய முடியவில்லை.
இந் நிலையில் மாலையில் மீண்டும் கருணாநிதியை சந்திப்பதாக திட்டமிட்டிருந்த கமல்நாத், அவரைசந்திக்காமலேயே டெல்லி திரும்பினார். இதற்கிடையே மாலையில் செய்தியாளர்களைச் சந்தித்த கருணாநிதிகாங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருப்பதாக அதிகாரப்பூர்வமாக தெரிவித்தார்.
10 தொகுதிகளில் 3 தொகுதிகளைத் தவிர மற்ற 7 தொகுதிகளின் பெயர்களையும் அவர் வெளியிட்டார்.மயிலாடுதுறை, சிவகங்கை, கோபிச் செட்டிப்பாளையம், பழனி, நீலகிரி, ராசிபுரம் (தனி), திண்டுக்கல்ஆகியவைதான் அந்த ஏழு தொகுதிகள். மற்ற 3 தொகுதிகள் எவை என்பது பின்னர் அறிவிக்கப்படும் என்றார்கருணாநிதி.
3 தொகுதிகள் எது என்பது அறிவிக்கப்படாதது, திமுக, காங்கிரஸ் இடையே தொகுதிப் பங்கீட்டில் இன்னும் சிக்கல்நிலவுவதையே காட்டுவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் இந்த சிக்கல் விரைவில்தீர்க்கப்பட்டு விடும் என்று இரு கட்சிகளும் நம்பிக்கையில் உள்ளன.
-
விஜய்யை எச்சரித்த மோடி.. கவனமாக இருங்கள்.. ரகசிய கேமரா இருக்கும்.. மீட்டிங்கில் சொன்ன அட்வைஸ் -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
நாளை மறுநாள் திருச்சி செல்லும் விஜய்.. முதல்வரான பிறகு பொதுவெளியில் முதல் நிகழ்ச்சி! பிளான் என்ன? -
பனையூருக்கு பறக்கும் ராயப்பேட்டை எக்ஸ்பிரஸ்.. அடுத்தடுத்து தாவும் அதிமுக தலைகள்! சரிந்த ஜெ. கோட்டை! -
"உண்மையை சொல்ல தைரியம் இல்லை".. ஜனநாயகன் ரிலீஸ் எப்போது? நொந்துபோய் எச் வினோத் சொன்ன பதில் -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
அஜித் தாயார் மறைவு! அரணாக இருந்து அரவணைத்த தாயை இழந்த நண்பருக்கு இரங்கல்! முதல்வர் விஜய் பதிவு -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்? -
ரூ.2500 உரிமைத்தொகை எப்போது கிடைக்கும்? நிதியமைச்சர் மரியவில்சன் கொடுத்த அப்டேட்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications