நாளை வாஜ்பாய், ஜெ. குமரி வருகை
சென்னை:
கன்னியாகுமரியில் நாளை (பிப்ரவரி 2ம் தேதி) நடைபெறவுள்ள தங்க நாற்கர நெடுஞ்சாலைத் திட்ட பூமி பூஜைவிழாவில் பிரதமர் வாஜ்பாயுடன் தமிழக முதல்வர் ஜெயலலிதாவும் பங்கேற்கிறார்.
திருவனந்தபுரம் விமானநிலையத்தில் இருந்து வாஜ்பாய் நாளை காலை 10.50 மணிக்கு கன்னியாகுமரி வருகிறார்.அங்கு தங்க நாற்கர பூமி பூஜை செய்து தொடங்கி வைக்கிறார். பின்னர் அங்கு அமைக்கப்பட்டுள்ள மேடையில்வாஜ்பாய், ஜெயலதா உரை நிகழ்த்துகின்றனர்.
இதன் பின்னர் வாஜ்பாய் ஹெலிகாப்டர் மூலம் நாகர்கோவில் சென்று அங்கு நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறார். ஜெயலலிதா ஹெலிகாப்டர் மூலம் வாகைகுளம் சென்று , அங்கிருந்து விமானம் மூலம் சென்னைசெல்கிறார்.
பா.ஜ.க- அதிமுக கூட்டணி ஏற்பட்டுவிட்டாலும் வாஜ்பாயுடன் தொடர்ந்து மோதலிலேயே இருந்து வரும்ஜெயலலிதா இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பாரா என்பது சந்தேகமாகவே இருந்து வந்தது.
இந் நிலையில் வாஜ்பாயுடன் ஒரே மேடையில் ஏற ஜெயலலிதா முன் வந்துள்ளார். பிரதமர் வாஜ்பாயுடன்கன்னியாகுமரியில் நடக்கும் நிகழ்ச்சியில் முதல்வர் ஜெயலலிதா பங்கேற்பார் என தமிழக அரசின் செய்திக்குறிப்பிலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி நிகழ்ச்சியில் பிரதமர் வாஜ்பாயும் முதல்வர் ஜெயலலிதாவும் ஒன்றாகக் கலந்து கொண்டாலும்இருவரும் தனியே சந்தித்துப் பேச்சு நடத்துவார்களா என்று தெரியவில்லை.
-
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
மாடு பலியிட தடை.. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்! அமைச்சர் ஷாஜஹான் உறுதி -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!










Click it and Unblock the Notifications