தொகுதிப் பங்கீடு: வாசன் தரப்பு கடும் ஏமாற்றம்
சென்னை:
காங்கிரஸ் கட்சிக்கு 10 சீட்கள் கிடைத்துள்ளதும், அதில் அறிவிக்கப்பட்டுள்ள 7 தொகுதிகள் குறித்தும் தமிழககாங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசனின் ஆதரவாளர்கள் கடும் ஏமாற்றத்தில் மூழ்கியுள்ளனர்.
ஜி.கே.வாசன் தரப்பு 14 தொகுதிகளை திமுகவிடம் வலியுறுத்தி வந்தது. ஆனால் 10 தொகுதிகளை மட்டுமே தரமுடியும் என்று திமுக திட்டவட்டமாக தெரிவித்து வந்தது. அதன்படியே தற்போது 10 தொகுதிகள் மட்டுமேகாங்கிரஸுக்குக் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் 7 தொகுதிகளின் பெயர்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.
அறிவிக்கப்பட்டுள்ள 7 தொகுதிகளில் முக்கால்வாசித் தொகுதிகளில் வாசன் எதிர்ப்புக் கோஷ்டியினரானஇளங்கோவன், பிரபு, மணிசங்கர் அய்யர் போன்றவர்களின் ஆதரவாளர்களே போட்டியிடக் கூடும் என்பதால்வாசன் தரப்பு கடும் ஏமாற்றத்தில் மூழ்கியுள்ளது.
காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகுதிகளில் மயிலாடுதுறையில் மீண்டும் மணிசங்கர அய்யர் போட்டியிடலாம்.நீலகிரியில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆர்.பிரபு போட்டியிடுவார்.
கோபிச் செட்டிப்பாளையத்தில் இளங்கோவனே நிற்கலாம் என்று பேச்சு அடிபடுகிறது, இல்லாவிட்டால் அவரதுஆதரவாளர்கள் யாராவது போட்டியிடக் கூடும். கோபியில் நிற்காவிட்டால் கிருஷ்ணகிரியில் இளங்கோவன்போட்டியிடலாம். கிருஷ்ணகிரி குறித்து இதுவரை எதுவும் அறிவிக்கப்படவில்லை.
ராசிபுரத்திலும் இளங்கோவன் ஆதரவாளரே நிறுத்தப்படக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திண்டுக்கல்,பழனியில் வேண்டுமானால் வாசன் ஆதரவாளர்களுக்கு டிக்கெட் கிடைக்கக் கூடும்.
வாசனின் தீவிர ஆதரவாளர்களான ஏ.ஜி.எஸ்.ராம்பாபு (மதுரை), ஏ.எம்.வேலு (அரக்கோணம்) ஆகியோருக்குஇந்த முறை பெரும் ஏமாற்றத்தையே திமுக அளித்துள்ளது. மதுரை மார்க்சிஸ்ட்டுகளுக்கும், அரக்கோணம்பா.ம.கவுக்கும் ஒதுக்கப்பட்டு விட்டது.
மொத்தத்தில் இந்தத் தொகுதிப் பங்கீட்டில் ஜி.கே.வாசனை ஒரு பொருட்டாகவே கருதாமல் திமுக நடந்துகொண்டுள்ளதாக வாசன் தரப்பு ஆதரவாளர்கள் பொருமிக் கொண்டுள்ளனர்.
-
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!











Click it and Unblock the Notifications