திமுக-காங் 3 தொகுதி இழுபறி தீர்ந்தது: 10 இடங்களும் முடிவாயின

Subscribe to Oneindia Tamil

சென்னை:

திமுக வசம் உள்ள3 தொகுதிகளை காங்கிரஸ் கட்சி கோரி வந்ததால் முழமை அடையாமல் இருந்து வந்ததிமுக-காங்கிரஸ் இடையிலான தொகுதிப் பங்கீடு பிரச்சனைக்கு இன்று தீர்வு காணப்பட்டது.

காங்கிரசுக்கு நேற்று வழங்கிய 7 இடங்களோடு இன்று பெரியகுளம், சேலம், திருநெல்வேலி ஆகிய 3இடங்களையும் திமுக ஒதுக்கியதையடுத்து தொகுதிப் பங்கீடு உடன்பாட்டில் இரு கட்சிகளும் இன்றுகையெழுத்திட்டன.

காங்கிரசுக்கு மொத்தம் 10 இடங்களை திமுக வழங்கியது. இதில் பாண்டிச்சேரி இல்லாததால் காங்கிரஸ்எரிச்சலடைந்தது. இந் நிலையில் ராஜிவ் காந்தி உயிர் நீத்த ஸ்ரீபெரும்புதூர், திருச்செந்தூர் மற்றும் வந்தவாசிதொகுதிகளை காங்கிரஸ் கோரியது.

இதில் வந்தவாசி மதிமுகவுக்குத் தரப்பட்டுவிட்டது. மற்ற இரு இடங்களிலும் திமுக கடந்த முறை வென்றது.இதனால் இந்த மூன்று இடங்களையும் தர முடியாது என கருணாநிதி கூறிவிட்டார். பதிலாக திருநெல்வேலி, கடலூர்மற்றும் பெரியகுளம் ஆகிய தொகுதிகளைத் தருவதாகக் கூறினார்.

ஆனால், இதை காங்கிரஸ் ஏற்க மறுத்ததால் 7 தொகுதிகள் மட்டுமே நேற்று காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டன. மற்ற 3தொகுதிகளை அடையாளம் காண்பதில் தொடர்ந்து சிக்கல் நீடித்தது.

குறைந்தபட்சம் ஸ்ரீபெரும்புதூரையாவது கொடுக்குமாறும், மற்ற 2 தொகுதிகள் குறித்து தாங்கள் பிடிவாதம் காட்டமாட்டோம் என்று காங்கிரஸ் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால், திமுக விட்டுத் தர முடியாது என்றுகூறிவிட்டது.

இதையடுத்து திமுகவுடனான பேச்சுவார்த்தைகளை பாதியிலேயே விட்டுவிட்டு டெல்லி சென்ற அகில இந்தியச்செயலாளர் கமல்நாத் அங்கு சோனியாவுடன் ஆலோசனை நடத்திவிட்டு இன்று மீண்டும் சென்னை வந்தார்.காலையில் அறிவாலயம் சென்று கருணாநிதியை அவர் சந்தித்துப் பேசினார்.

அப்போது பெரியகுளம், சேலம், திருநெல்வேலி ஆகிய இடங்களை ஏற்க கமல்நாத் முன் வந்தார். இதைத்தொடர்ந்து இரு தரப்பினரும் இன்று தொகுதிப் பங்கீட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+