விடுதலைச் சிறுத்தைகள்-- புதிய தமிழகம் கூட்டணி: திமுக மீது கடும் தாக்கு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

ஜாதிக் கட்சியான பா.ம.கவுக்கு மட்டும் நாடாளுமன்றத் தேர்தலில் சீட் கொடுத்து விட்டு எங்களை திமுகபுறக்கணித்திருப்பது நன்றி மறந்த செயல் என்று விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் பொதுச் செயலாளர்திருமாவளவன், புதிய தமிழகம் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி ஆகியோர் கூறியுள்ளனர்.

இரு தலித் கட்சிகளும் கூட்டணி அமைத்து தனித்துப் போட்டியிட முடிவு செய்துள்ளன. இரு தலைவர்களும் இன்றுசெய்தியாளர்களிடம் கூட்டாக பேசினர். திருமாவளவன் கூறுகையில், திமுகவுக்கு இரு தலித் கட்சிகளும்எத்தனையோ உதவிகளைச் செய்துள்ளன. எங்களது வாக்கு வங்கிகளை அப்படியே திமுகவுக்கு தாரைவார்த்துள்ளோம்.

ஆனால் செய்த நன்றியை மறந்து விட்டு, எங்களை வஞ்சம் தீர்ப்பது போல், பா.ம.கவுடன் கை கோர்த்துக் கொண்டுஎங்களை கருணாநிதி புறக்கணித்துவிட்டார். அவரது தலித் ஆதரவு வேடம் கலைந்துவிட்டது. எங்களை ஜாதிக்கட்சி என்று கூறும் திமுக தலைவர் கருணாநிதி, பா.ம.கவை எந்தக் கட்சியாக கருதுகிறார்? பா.ம.க. ஜாதி பாரபட்சம்பார்க்காத கட்சி என்று அவரால் கூற முடியுமா?

முஸ்லீம் கட்சிக்கு இடம் தரும்போது எங்களுக்கு ஏன் தரக் கூடாது. முதுகில் குத்திய ராமதாசுக்கு முக்கியத்தும்தருவது ஏன்?

எங்கள் மீது தரமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்தும் கருணாநிதியை கடுமையாக கண்டிக்கிறேன். முதுகுளத்தூர்,கீழ்வெண்ணி, கொடியங்குளம் சம்பவங்கள் எல்லாம் அவரது ஆட்சிக் காலத்தில் தான் நடந்தன. அவை நடக்காமல்தடுத்திருந்தால் எங்கள் இயக்கமே தோன்றியிருக்காது.

வரும் தேர்தலில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு 7 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறுகிறார். அவைஅனைத்தும் ரிசர்வ் தொகுதிகள். அதை ஒதுக்கித்தானே ஆக வேண்டும். பொதுத் தொகுதியில் தலித்தை அவர் நிற்கவைப்பாரா?.

எங்களை நம்ப வைத்து ஏமாற்றியிருக்கிறார் கருணாநிதி.

வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் விடுதலைச் சிறுத்தைகளும், புதிய தமிழகமும் இணைந்து போட்டியிடும்.எங்களது கூட்டணியில் பிற கட்சிகளை சேர்ப்பது குறித்தும் ஆலோசனை செய்து வருகிறோம். 40 தொகுதியிலும்நாங்கள் போட்டியிடுவோம்.

இனி எங்களைக் கூப்பிட்டு சீட் கொடுத்தாலும் திமுக கூட்டணியில் சேர மாட்டோம். கருணாநிதியை சந்திக்கவும்மாட்டோம். வாழ்நாளில் இனி அந்தத் தவறை செய்ய மாட்டோம். எதிர்காலத்திலும் டாக்டர் கிருஷ்ணசாமியும்நானும் இணைந்து செயல்படுவோம் என்றார்.

தலித் கட்சிகள் இரண்டும் இணைந்திருப்பது தமிழக அரசியலில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தும் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது. புதிய தமிழகத்திற்கு தென் மாவட்டங்களிலும், விடுதலைச் சிறுத்தைகளுக்கு வடமாவட்டங்களிலும் நல்ல செல்வாக்கு உள்ளது.

மேலும், திருநெல்வேலி, தென்காசி போன்ற பகுதிகளில் உள்ள தலித் ஓட்டுக்கள் கிருஷ்ணசாமிக்கே கிடைக்கும்என்று கூறப்படுகிறது. அதேபோல, கடலூர், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள தலித் வாக்குகள் திருமாவளவனுக்குசாதகமாகவே இருக்கும். கடலூரில் திருமாவளவனும், தென்காசியில் கிருஷ்ணசாமியும் போட்டியிடலாம் என்றுகூறப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+