ஜெ. வீட்டில் விருந்து சாப்பிட்ட அத்வானி: திமுகவை மறக்கவில்லை
சென்னை:
முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்தில் துணைப் பிரதமர் அத்வானிக்கு நேற்று இரவு விருந்துஅளிக்கப்பட்டது.
அண்ணா பல்கலைக்கழக பண்பலை வானொலியைத் துவக்குவதற்காக நேற்று சென்னை வந்திருந்தார் அத்வானி.அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு இரவு ஜெயலலிதாவின் போயஸ் தோட்டத்திற்குச் சென்றார். அங்கு அவருக்கு இரவுவிருந்து அளித்தார் ஜெயலலிதா.
அத்வானி தவிர மத்திய தகவல் ஒளிபரப்புத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், அண்ணா பல்கலைக்கழகதுணைவேந்தர் உள்ளிட்ட அதிகாரிகளும் விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். அனைவரையும் தனது வீட்டுபோர்டிகோவில் நின்று வரவேற்றார் ஜெயலலிதா.
விருந்துக்குப் பின்னர் வெளியே வந்த அத்வானியிடம் செய்தியாளர்கள் விருந்தின்போது என்ன பேசினீர்கள்என்று கேட்டபோது, கூட்டணி குறித்து பேசப்பட்டது. தொகுதிப் பங்கீட்டில் பிரச்சினை இருப்பதாக எனக்குத்தெரியவில்லை. அனைத்துமே சுமூகமாக உள்ளது.
நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாக மாநில அரசியல் நிலைமை குறித்து விவாதித்தோம். தொகுதிப் பங்கீடு குறித்துமாநில பா.ஜ.கவினரே தீர்மானித்துக் கொள்வர்.
பல ஆண்டுகளுக்குப் பிறகு போயஸ் தோட்டத்திற்கு வந்துள்ளேன். ஜெயலலிதாவின் வரவேற்பும், விருந்தும்எனக்கு மிகவும் மகிழ்ச்சியைத் தந்துள்ளன. இதற்காக அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
வாஜ்பாய் ஆட்சியின் கீழ் இந்தியா பெருமை அடைந்துள்ளது. மீண்டும் வாஜ்பாய் பிரதமராக வேண்டும் என்றுகடவுள் விரும்புகிறார். அது நிச்சயம் நடக்கும் என்றார் அத்வானி.
விருந்துக்குப் பின்னர் அவர் டெல்லி புறப்பட்டுச் சென்றார். அத்வானி, ஜெயலலிதா பேச்சுவார்த்தையின்போதுதொகுதிப் பங்கீடு குறித்து முடிவு எதுவும் எடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை.
திமுகவை "மறக்காத" அத்வானி !!
முதல்வர் ஜெயலலிதாவுடன் கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்திய துணைப் பிரதமர் அத்வானிசெய்தியாளர்களிடம் பேசும்போது, வாய் தவறுதலாக திமுகவுடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாககுறிப்பிட்டார்.
செய்தியாளர்களிடம் ஈஞடீஞீ பேசுகையில், தொகுதிப் பங்கீடு தொடர்பாக மாநில திமுகவுடன் பா.ஜ.க. தேர்தல்குழுவினர் பேசிக் கொண்டிருப்பதாக வாய் தவறுதலாக தெரிவித்தார். பின்னர் அருகில் இருந்த மத்திய அமைச்சர்ரவிசங்கர் பிரசாத், அதிமுக என்று எடுத்துக் கொடுத்தவுடன், சுதாரித்துக் கொண்டு அதிமுகவுடன் பேச்சுவார்த்தைநடந்து வருவதாக கூறினார் அத்வானி.
நீண்ட காலமாக திமுகவுடன் உறவு வைத்துக் கொண்டு திடீரென்று பிரிந்ததால் அத்வானியால் இன்னும் திமுகவைமறக்க முடியவில்லை போலும்!
-
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
பாத்து பண்ணி விடுங்க.. ராஜ்யசபா சீட்டுக்கு அடி போடும் காங்.,? விஜய்யிடம் நேரில் பேசிய ப.சிதம்பரம்! -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
புதிய டிஜிபி-யுடன் விஜய் தலைமைச் செயலக சேம்பரில் 'ஒரு மணிநேர' க்ளோஸ் டோர் மீட்டிங்.. 3 முக்கிய அசைன்மென்ட்! -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
அன்னதானம் எங்க போடறீங்க.. வாட்டர் ஸ்பாட் எங்க.. அதிகாரிகளை கேள்விகளால் துளைத்த ரமேஷ் -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை?











Click it and Unblock the Notifications