அதிமுக-பா.ஜ.க. கூட்டணி: பின்னணியில் சங்கராச்சாரியார்?
சென்னை:
அதிமுக- பா.ஜ.க. கூட்டணி உருவானதில் காஞ்சி சங்கராச்சாரியாரின் பங்கும் பெருமளவில் உள்ளதாகக்கூறப்படுகிறது.
கடந்த வாரம் முதல்வர் ஜெயலலிதாவை பா.ஜ.க. தலைவர் வெங்கையா நாயுடு சந்தித்தபோது, கூட்டணிதொடர்பாக தான் வைத்த நிபந்தனைகளைச் சுற்றியே ஜெயலலிதா பேசியதால், கூட்டணி ஏற்படுமா என்பதேசந்தேகத்துக்கிடமாக இருந்தது.
அப்போது நுங்கம்பாக்கத்தில் இருந்த காஞ்சி சங்கராச்சாரியாரிடம் தமிழக பா.ஜ.க. தலைவர்கள் இந்தவிவகாரத்தை எடுத்துச் செல்ல, எல்லாம் நல்லபடியாக முடியும் என அவர் உறுதியளித்துள்ளார். இதனால் கூட்டணிஉருவானதில் அவரது முயற்சியும் இருந்ததாகக் கூறப்படுகிறது.
அவரது யோசனையின் அடிப்படையில் தான் துணைப் பிரதமர் அத்வானி- ஜெயலலிதா சந்திப்பும்ஏற்பாடானதாகத் தெரிகிறது.
இந் நிலையில் சென்னையில் உள்ள பா.ஜ.க. தலைமை அலுவலகமான கமலாலயத்திற்கு வந்த சங்கராச்சாரியார்அங்கு கட்டப்பட்டுள்ள புதிய கட்டத்தைத் திறந்து வைத்தார். அப்போது அவரிடம் அதிமுகவுடனான கூட்டணி,இடங்கள் பங்கீடு ஆகியவை குறித்து மாநில பா.ஜ.கவினர் பேசியுள்ளனர்.
இதற்கிடையே பா.ஜ.க. தேர்தல் குழு மத்திய அமைச்சர் திருநாவுக்கரசர் தலைமையில் அமைக்கப்பட்டிருந்தது.ஆனால், திருநாவுக்கரசருக்கும் ஜெயலலிதாவுக்கும் ஏழாம் பொறுத்தம் என்பதால் அதிமுக கூட்டணியை மனதில்வைத்து திருநாவுக்கரசர் அந்தக் குழுவில் இருந்து பா.ஜ.க. நீக்கியுள்ளது.
வரும் 4ம் தேதி அதிமுக பொதுக் குழுக் கூட்டம் நடக்கிறது. அன்றைய தினம் பா.ஜ.கவுக்கு எத்தனைத் தொகுதிகள்என்பதை ஜெயலலிதா அறிவிப்பார் என பா.ஜ.க. எதிர்பார்க்கிறது. இந்த எதிர்பார்ப்பின் அடிப்படையில் வரும் 6ம்தேதி பா.ஜ.கவும் தனது பொதுக் குழுவைக் கூட்டியுள்ளது.
இதற்கிடையே இன்று செய்தியாளர்களிடம் பேசிய பா.ஜ.க. பொதுச் செயலாளர் குமாரவேலு,
அதிமுக-பா.ஜ.க. தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைகள் நடந்து முடிந்துவிட்டது. எங்களுக்கு வெற்றி வாய்ப்புள்ள15 இடங்களின் பட்டியலைத் தந்திருக்கிறோம். துணைப் பிரதமர் அத்வானியும் முதல்வர் ஜெயலலிதாவிடம் இதுகுறித்துப் பேசியுள்ளார்.
இன்று அல்லது நாளையே பா.ஜ.கவுக்கு ஒதுக்கப்பட்டுள்ள இடங்கள் குறித்த அறிவிப்பை அதிமுக வெளியிடும்என்று எதிர்பார்க்கிறோம். எங்கள் கட்சியின் வேட்பாளர் பட்டியலும் உடனே வெளியாகிவிடும் என்றார்.
-
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
எடப்பாடியை பார்க்க விஜய் டைம் கேட்கவில்லை.. ஆதவ் ஒரு சந்தர்ப்பவாதி! போட்டுத் தாக்கிய கேபி முனுசாமி! -
கையை மீறி போகும் டாஸ்மாக் விவகாரம்.. நேரடியாக இறங்கிய விஜய்.. ஒரே நேரத்தில் 2 பிரச்சனைகளுக்குத் தீர்வு! -
விஜய்யை பார்க்க வேண்டாம்.. ஸ்டாலினை கைவிட்டு இருக்க கூடாது.. ராகுலிடம் எகிறிய ப்ரியங்கா காந்தி! -
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
புதிய டிஜிபி-யுடன் விஜய் தலைமைச் செயலக சேம்பரில் 'ஒரு மணிநேர' க்ளோஸ் டோர் மீட்டிங்.. 3 முக்கிய அசைன்மென்ட்! -
13 மாவட்டங்களில் பெண் கலெக்டர்கள்.. விஜய்யின் சிங்கப்பெண் ரூட்.. மாவட்டம்தோறும் அதிரடி -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
அன்னதானம் எங்க போடறீங்க.. வாட்டர் ஸ்பாட் எங்க.. அதிகாரிகளை கேள்விகளால் துளைத்த ரமேஷ்











Click it and Unblock the Notifications