4 வழி நெடுஞ்சாலை: குமரியில் இன்று அடிக்கல் நாட்டுகிறார் வாஜ்பாய்
கன்னியாகுமரி:
கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான தங்க நாற்கரச் சாலைக்கு அடிக்கல் நாட்டும் விழா இன்று காலைநடக்கிறது. பிரதமர் வாஜ்பாய் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டுகிறார்.
கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலும் 4 வழிச் சாலையை அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.இதற்கான பூமி பூஜையும், அடிக்கல் நாட்டு விழாவும் இன்று காலை 11 மணிக்கு கன்னியாகுமரியில் நடக்கிறது.
இதில் பிரதமர் வாஜ்பாய் கலந்து கொள்கிறார். இதற்காக நேற்று மாலை அவர் திருவனந்தபுரம் வந்து சேர்ந்தார்.இன்று காலை நடக்கும் அடிக்கல் நாட்டு விழாவில் முதல்வர் ஜெயலலிதாவும் கலந்து கொள்கிறார்.
மாலையில் நாகர்கோவிலில் பா.ஜ.க. சார்பில் பொதுக்கூட்டம் நடத்தப்படுகிறது. இதில் பிரதமர் வாஜ்பாய் கலந்துகொண்டு பேசவுள்ளார். அதன் பின்னர் அவர் டெல்லி புறப்பட்டுச் செல்கிறார்.
வாஜ்பாய் வருகையையொட்டி கன்னியாகுமரி, நாகர்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் 5,000க்கும் மேற்பட்டபோலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications