பா.ம.வுக்கு எதிராக களமிறங்கும் ஜெகத்: அதிமுக ஆதரவு கிடைக்கலாம்
பாண்டிச்சேரி:
பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ், வன்னிய சமூகத்தை ஏமாற்றி வருகிறார். அவரைஅம்பலப்படுத்தும் வகையில் வீர வன்னியர் பேரவையை அரசியல் கட்சியாக மாற்றப் போவதாக பேரவையின்தலைவர் டாக்டர் ஜெகத்ரட்சகன் கூறியுள்ளார்.
எம்.ஜி.ஆர். கழக பொதுச் செயலாளர் ஆர்.எம்.வீரப்பனின் நெருங்கிய சிஷ்யரான ஜெகத்ரட்சகன் தற்போதுஅரக்கோணம் தொகுதி எம்.பியாக உள்ளார். கடந்த தேர்தலில் திமுக சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றஅவருக்கு இந்த முறை திமுக கூட்டணியில் சீட் கிடைக்கவில்லை. அந்த இடத்தை பா.ம.கவுக்கு திமுகஒதுக்கிவிட்டது.
இதையடுத்து அரக்கோணம் தொகுதியில் பா.ம.க. வேட்பாளரை எதிர்த்து நிற்க முடிவு செய்துள்ளஜெகத்ரட்சகனுக்கு அதிமுக ஆதரவு கிடைக்கும் என்று தெரிகிறது.
பாண்டிச்சேரியில் செய்தியாளர்களிடம் பேசிய ஜெகத்ரட்சகன், வன்னிய சமுதாயத்தினரை ஏமாற்றியும், சுரண்டியும்வருகிறார் டாக்டர் ராமதாஸ்.
அவரை அம்பலப்படுத்தவும், வன்னிய சமுதாயத்தை மேம்படுத்தவும் வீர வன்னியர் பேரவை, அரசியல் அவதாரம்எடுக்கவுள்ளது. கட்சியின் பெயர், கொடி, சின்னம், நாடாளுமன்றத் தேர்தலில் யாருடன் சேர்ந்து போட்டியிடுவதுஆகியவற்றை பிப்ரவரி 15ம் தேதி சேலத்தில் கூடி முடிவெடுக்கவுள்ளோம்.
பொருளாதாரம், கல்வி, வேலைவாய்ப்பில் வன்னியர்களை முன்னேற்றுவதே எங்களது புதிய கட்சியின் முக்கியநோக்கமாகும். ராமதாஸ் நடத்தி வருவது சந்தர்ப்பவாத, சுயநல அரசியலாகும்.
ராஜ்யசபா தேர்தலில் தனது மகனையோ அல்லது குடும்ப உறுப்பினர்களையோ ராமதாஸ் நிறுத்தாமல் இருந்தால்நல்லது. வன்னியர்கள் அத்தனை பேரும் தனது பக்கம்தான் இருப்பதாக கருணாநிதியை ஏமாற்றி 6 சீட்களைவாங்கி விட்டார் ராமதாஸ். ஆனால் தேர்தலில் அவருக்குக் கிடைக்கப் போவது பெரும் தோல்விதான்.
அதேபோல, 2001ம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் பாண்டிச்சேரியில் ஒரு தொகுதியில் கூட பா.ம.கவால்வெல்ல முடியவில்லை, டெபாசிட் தொகையைக் கூட பல தொகுதிகளில் இழந்தது. அப்படி இருந்தும், பாண்டிச்சேரிநாடாளுமன்றத் தொகுதியை திமுக தலைவர் கருணாநிதி எப்படி பா.ம.கவுக்குத் தந்தார் என்பது வியப்பாக உள்ளதுஎன்றார் ஜெகத்ரட்சகன்.












Click it and Unblock the Notifications