வீரப்பனின் கூட்டாளி சரண்
Subscribe to Oneindia Tamil
கொள்ளேகால்:
சந்தனக் கடத்தல் வீரப்பனின் கூட்டாளி ஒருவன் கர்நாடக அதிரடிப்படையினரிடம் சரண் அடைந்துள்ளான்.அவனிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
வீரப்பனுக்கு உணவுப் பொருட்களை சப்ளை செய்து வருபவன், கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டம்மூக்கனபாளையா கிராமத்தைச் சேர்ந்த நாகநாயக்கா. இவனைப் பிடிக்க கர்நாடக அதிரடிப்படையினர் வலைவீசித்தேடி வந்தனர்.
கடந்த 10 ஆண்டுகளாக அதிரடிப்படையினரின் கண்களில் மண்ணைத் தூவி வந்த நாகநாயகா, திடீரென்றுபுனஜெனூரில் உள்ள கர்நாடக அதிரடிப்படை முகாமுக்குச் சென்று, சரணடைந்துள்ளான்.
அவனிடம் அதிரடிப்படை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். வீரப்பனின் நெருங்கிய கூட்டாளிஎன்பதால், நாகநாயக்காவிடம் இருந்து, நாகப்பா கொலை விவரம் பற்றி தெரிய வரலாம் என்றுஅதிரடிப்படையினர் எதிர்பார்க்கின்றனர்.












Click it and Unblock the Notifications