அண்ணா நினைவு நாள்: கருணாநிதி அஞ்சலி- ஜெ. வரவில்லை
சென்னை:
முன்னாள் முதல்வர் அண்ணாதுரையின் 35வது நினைவு நாளையொட்டி அவரது சமாதியில் திமுக தலைவர்கருணாநிதி உள்ளிட்டோர் மலரஞ்சலி செலுத்தினர். ஆனால், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா அண்ணாவுக்கு அஞ்சலி செலுத்த வரவில்லை.
இன்று காலை7 மணியளவில் சேப்பாக்கம் திமுக சட்டமன்றத் தொகுதி அலுவலகத்திலிருந்து அக் கட்சியின்தலைவர் கருணாநிதி தலைமையில் அமைதி ஊர்வலம் நடத்தப்பட்டது. அண்ணா நினைவிடத்தில் டிந்தஊர்வலத்தின் இறுதியில் கருணாநிதி, அன்பழகன், ஆற்காடு வீராசாமி, துரைமுருகன், ஸ்டாலின் உள்ளிட்டோர் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
அதிமுக சார்பில் நிதியமைச்சர் பொன்னையன் தலைமையில் அமைச்சர்கள் ஓ.பன்னீர் செல்வம், ஜெயக்குமார்,துணை மேயர் கராத்தே தியாகராஜன், அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்டோர் மலர் வளையம்வைத்து அஞ்சலி செலுத்தினர். முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தில் மலர் வளையம் வைப்பதாக இருந்தது.ஆனால் அவர் வரவில்லை.
மதிமுக சார்பில் மாலையில் அவைத் தலைவர் எல்.கணேசன், கண்ணப்பன், செஞ்சி ராமச்சந்திரன் உள்ளிட்டோர்அண்ணா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துகிறார்கள்.
கடந்த பல ஆண்டுகளாகவே அண்ணா சமாதியில் அஞ்சலி செலுத்துவதை முதல்வர் ஜெயலலிதா தவிர்த்து வருவதுகுறிப்பிடத்தக்கது.
-
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications