நாளை கூடுகிறது தமிழக சட்டசபை
சென்னை:
தமிழக சட்டசபைக் கூட்டத் தொடர் நாளை ஆளுனர் உரையுடன் தொடங்குகிறது.
இது தொடர்பாக சபாநாயகர் காளிமுத்து செய்தியாளர்களிடம் பேசுகையில், காலை 11 மணிக்கு ஆளுநர் ராம்மோகன் ராவின் உரையுடன் கூட்டத்தொடர் தொடங்கும். ஆளுநர் உரையை எதிர்க்கட்சிகள் புறக்கணித்துவெளிநடப்புச் செய்யாமல் இருந்தால், ஆளுநர் உரை தமிழில் படிக்கப்படும். இல்லாவிட்டால் தமிழில் உரைபடிக்கப்பட்டதாக பதிவு செய்யப்படும்.
ஆளுநர் உரைக்குப் பின்னர் சட்டசபை ஒத்திவைக்கப்பட்டு 5,6,7,9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் கூட்டத் தொடர்நடக்கும். இதில் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் கேள்வி நேரம் இடம்பெறாது.
10ம் தேதி ஆளுநர் உரை மீதான விவாதத்திற்கு முதல்வர் ஜெயலலிதா பதில் அளிப்பார். அன்றைய தினமே கூட்டத்தொடர் டிவடையும்.
விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் தனது ராஜினாமா கடிதத்தை என்னிடம் அளித்துள்ளார். அக்கடிதம் எனது பரிசீலனையில் உள்ளது என்றார் காளிமுத்து.
கடந்த சட்டமன்றக் கூட்டத்தின்போதும் ஆளுநர் உரை தமிழில் படிக்கப்படவில்லை என்று எதிர்க் கட்சிகள்பிரச்சனை கிளப்பின. மேலும் கடந்த சட்டமன்றக் கூட்டத்தின் கடைசி நாளன்று தான் இந்து, முரசொலி பத்திரிக்கைஆசிரியர்களைக் கைது செய்யச் சொல்லி உத்தரவு போட்டார் காளிமுத்து.
பின்னர் உச்ச நீதிமன்றத்தில் இந்து நடத்திய சட்டப் போராட்டம் காரணமாக, தமிழக அரசு பணிந்ததுகுறிப்பிடத்தக்கது. மக்களவைக்கு தேர்தல் நடைபெற உள்ளதால், இந்தக் கூட்டத் தொடரின்போது பல சலுகைத்திட்டங்களை ஜெயலலிதா அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக












Click it and Unblock the Notifications