தமிழகத்துக்கு உயர் தர மருத்துவமனை, சென்னைக்கு குடிநீர் திட்டம்- மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

டெல்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழக மருத்துவமனைக்கு இணையாக தமிழகத்திலும் ஒருமருத்துவமனை அமைக்கப்படும் என மத்திய அரசின் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னையில்குடிநீர் பிரச்சனையைத் தீர்க்க அதிவிரைவுத் திட்டம் அமலாக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மக்களவைக்கு முன்கூட்டியே தேர்தல் நடத்தப்படுவதையொட்டி, மத்திய நிதியமைச்சர் ஜஸ்வந்த் சிங் இன்று2004-2005ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டைத் தாக்கல் செய்தார். முன்னதாக ஜனநாயக மாண்புகளைப்புறக்கணித்துவிட்டு திடீர் தேர்தல், திடீர் பட்ஜெட்டை மத்திய அரசு தாக்கல் செய்வதாகக் கூறி எதிர்க் கட்சியினர்பெரும் பிரச்சனை கிளப்பினர்.

இதனால் பட்ஜெட் தாக்கல் தாமதமானது. எதிர்க் கட்சிகளின் கோரிக்கைகளையும் எதிர்ப்புகளையும் சபாநாயகர்மனோகர் ஜோஷி ஒட்டுமொத்தமாக நிராகரித்ததையடுத்து பட்ஜெட்தை தாக்கல் செய்தார் ஜஸ்வந்த் சிங்.

அவர் வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள் விவரம்:

* தமிழகம், ஆந்திரம், மேற்குவங்கம், ஜார்க்கண்ட், உத்தராஞ்சல், காஷ்மீர் ஆகிய மாநிலங்களில் அகில இந்தியமருத்துவ ஆராய்ச்சிக் கழக மருத்துவமனைக்கு இணையாக ஒரு மருத்துவக் கல்லூரி- மருத்துவமனைமேம்படுத்தப்படும்.

* சென்னை, பெங்களூர், ஹைதராபாத், டெல்லி ஆகிய பெரு நகரங்களின் குடிநீர் பிரச்சனையைத் தீர்க்கஅதிவிரைவுத் திட்டங்கள் அமலாக்கப்படும்.

* மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படியில் 50 சதவீதம் அடிப்படை ஊதியத்துடன் சேர்க்கப்படும்.இதனால் ஊழியர்களின் ஊதியம் உயரும்.

* நாட்டின் அனைத்து விவசாயிகளுக்கும் விவசாயக் கடன் அட்டைகள் வழங்கப்படும்.

* மீண்டும் ஒரு பசுமைப் புரட்சியை ஏற்படுத்துவோம். வேலை வாய்ப்புக்களை உருவாக்குவோம், ஏழ்மையைவிரட்டுவோம்.

* அரசின் செலவுகளைக் குறைத்த வகையில் ரூ. 11,145 கோடி மிச்சப்படுத்தப்பட்டுள்ளது.

* சுங்க வரியை ஆன்-லைன் மூலம் செலுத்தும் வசதி வரும் ஜூன் 30ம் தேதி முதல் அமல்படுத்தப்படும்.

* பாதுகாப்புத்துறையை நவீனப்படுத்த ரூ. 25,000 சிறப்பு நிதி ஒதுக்கப்படும்.

* இந்தியாவில் அமைக்கப்படும் பிற நாட்டு கால்சென்டர்கள், அவுட்சோர்ஸிங் நிறுவனங்களுக்கு வரி விலக்குஅளிக்கப்படும்.

* வருமான வரி விதிப்பில் மாற்றம் ஏதும் இல்லை. அதே நேரத்தில் ஸ்டான்டர்ட் டிடக்சன் எனப்படும் ஊதியத்தின்மீதான குறைந்தபட்ச அடிப்படை வரி விலக்கை மேலும் அதிகரிப்பது குறித்து பரிசீலிக்கப்படும்.

* நாட்டின் சாலை வசதியை மேம்படுத்த ரூ. 3,000 கோடி ஒதுக்கப்படும்.

* மின்சார கட்டமைப்பை மேம்படுத்த ரூ. 15,630 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்

*தேசிய நெடுஞ்சாலைப் பணிகளுக்கு ரூ. 10,344 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

தேர்தல் வருவதையொட்டி புதிய வரிகள் எதுவும் விதிக்கப்படவில்லை. மேலும் கடந்த மாதம் தான் ரூ. 12,000கோடி அளவுக்கு வரி விலக்குகள் கொண்ட மினி பட்ஜெட்டை அரசு அறிவித்தது. இதனால் இந்த பட்ஜெட்டில்வரிச் சலுகைகள் ஏதும் அறிவிக்கப்படவில்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+