திருமாவளவன், கிருஷ்ணசாமி கூட்டணி: திமுக ஓட்டுக்களை பிரிக்குமா?
சென்னை:
தலித் கட்சிகளான விடுதலைச் சிறுத்தைகளும், புதிய தமிழகம் கை கோர்த்திருப்பது தமிழக தேர்தல் களத்தில் புதியதிருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
3வது அணி என்று பேசிக் கொண்டிருந்தவர்கள் எல்லாம் இப்போது திமுக அணியில் திரண்டிருக்க, தலித் கட்சிகள்இணைந்து 3வது அணியை உருவாக்கி விட்டன.
கருணாநிதியின் பிடிவாதப் போக்கினால் வெகுண்டெழுந்துள்ள விடுதலைச் சிறுத்தைகளும், புதிய தமிழகம்இணைந்து கூட்டணி அமைத்து நாடாளுமன்றத் தேர்தலைச் சந்திக்க உள்ளன.
இந்தக் கூட்டணியில் வேறு சில கட்சிகளும் இணையலாம் என்று கூறப்படுகிறது. குறிப்பாக கண்ணப்பனின் மக்கள்தமிழ் தேசம் போன்ற தலித்களுடன் மோதல் போக்கை கடைபிடிக்காத பிற ஜாதிக் கட்சிகளும் இதில் இணையவாய்ப்புள்ளது.
கடந்த 1999ம் ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலின்போது தமாகா தலைமையிலான கூட்டணியில் விடுதலைச்சிறுத்தைகளும், புதிய தமிழகமும் இடம் பெற்றிருந்தன. இருப்பினும் திருமாவளவனும் டாக்டர் கிருஷ்ணசாமியும்நேருக்கு நேர் பார்த்துக் கொள்வதையோ, பேசிக் கொள்வதையோ கூட தவிர்த்து வந்தனர்.
அந்த அளவுக்கு இருவரும் இரு துருவங்களாகவே இயங்கி வந்தனர்.
2001ம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலின்போது திமுக தலைமையிலான கூட்டணியில் இரு கட்சிகளும் இடம்பெற்றன. அப்போதும் இருவரும் பேசிக் கொண்டது கிடையாது. இரு கட்சிகளும் தேர்தலில் படுதோல்வியைசந்தித்தன. திருமாவளவன் மட்டுமே கடலூர் மாவட்டம் மங்களூர் தொகுதியில் வெற்றி பெற்றார்.
திருமாவளவனுக்கு பறையர் சமூகத்துக்கு ஆதி திராவிட மக்கள் மத்தியில் பெரும் செல்வாக்கு உள்ளது. அதேபோல தேவேந்திரகுல வேளாளர்கள் என அழைக்கப்படும் பள்ளர் சமூக தலித் மக்கள் மத்தியில் டாக்டர்கிருஷ்ணசாமிக்கு நல்ல செல்வாக்கு உள்ளது.
இரு தலைவர்களுக்குமே தலித் மக்கள் மத்தியில் மிகப் பெரும் செல்வாக்கு இருந்தும், இருவரும் ஒற்றுமையுடன்செயல்படாத காரணத்தால் இரு பிரிவு தலித் ஓட்டுக்களும் இதுவரை பிரிந்தே கிடந்தன.
இருவரும் ஈகோ பார்க்காமல் சேர்ந்து செயல்பட்டால், தலித் ஓட்டு வங்கி மிகப் பெரிய சக்தியாக மாறும் என்றுதமிழக அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டு வந்தது. இருவரையும் சேர்த்து வைக்கக் கூட சில தலைவர்கள்முயன்றனர். இருப்பினும் இந்த இருவருமே இணைந்து செயல்படும் எண்ணமே இல்லாமல் இருந்து வந்தனர்.
தற்போது தங்களை ஏமாற்றிவிட்டதாக திமுகவைக் குற்றம் சாட்டிவிட்டு, இரு கட்சிகளும் கூட்டணிஅமைத்துள்ளன. பிரச்சாரத்தின்போதும் அதிமுகவை விட்டுவிட்டு திமுகவுக்கு எதிராகவே இவர்கள் காய்நகர்த்துவார்கள் என்று கூறப்படுகிறது.
இருவரும் திட்டமிட்டு செயல்பட்டால் திமுக தலைமையிலான ஜனநாயக முற்போக்குக் கூட்டணியின் வாக்குவங்கிக்கு பெரும் அடி கிடைக்கும் என்கின்றனர் தமிழக அரசியல் பார்வையாளர்கள்.
அத்தோடு அதிமுக தரப்பில் இருந்தும் இந்தத் தலைவர்களுக்கு மறைமுக ஆதரவு கிடைக்கவும் வாய்ப்புள்ளதாகபேச்சு அடிபடுகிறது.
-
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications