புதுக்கோட்டை, தர்மபுரியில் ரூ. 20 கோடி ஹெராயின் சிக்கியது: 3 பேர் கைது
சென்னை:
புதுக்கோட்டையிலும் தர்மபுரியிலும் ரூ. 20 கோடி மதிப்புள்ள ஹெராயினை, போதைப் பொருள் தடுப்புப்போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.
சென்னை போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளுக்கு நேற்று காலை ஒரு தொலைபேசித் தகவல் வந்தது.அதில் பேசியவர், சென்னையைச் சேர்ந்த ஒரு நபர், திருச்சியிலிருந்து கார் மூலம் ஹெராயின் கடத்தவுள்ளதாகவும்,அந்த ஹெராயினை கப்பல் மூலம் இலங்கைக்கு கடத்தத் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இதையடுத்து போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் திருச்சி விரைந்தனர். உள்ளூர் போலீஸாரின்உதவியுடன் கார்களை நிறுத்தி சோதனையிட்டனர். அப்போது புதுக்கோட்டை அருகே ஹெராயின் கடத்தி வந்தகார் பிடிபட்டது. அதில் ரூ. 11 கோடி மதிப்புள்ள ஹெராயின் இருந்தது.
காரில் இருந்த நபரிடம் விசாரணை நடத்தியபோது, இதற்கு முன்பும் இதுபோல 5 முறை ஹெராயின் கடத்தியதைஒப்புக் கொண்டார்.
தர்மபுரியிலும்...
இதேபோல, தர்மபுரியிலும் ரூ. 9 கோடி மதிப்புள்ள ஹெராயினை போதைப் பொருள் தடுப்பு அதிகாரிகள்பறிமுதல் செய்துள்ளனர்.
தர்மபுரி மாவட்டம் குருபரபள்ளி என்ற இடத்தில் உள்ள லாரி ஷெட்டில் போதைப் பொருள் மறைத்துவைக்கப்பட்டுள்ளதாக வந்த தகவலையடுத்து அங்கு அதிகாரிகள் சோதனையிட்டனர்.
அப்போது ராஜஸ்தான் பதிவு எண் கொண்ட ஒரு லாரியில் எட்டு பொட்டலங்களாக கட்டி மறைத்துவைக்கப்பட்டிருந்த ஹெராயினைக் கைப்பற்றினர்.
மொத்தம் 9 கிலோ ஹெராயின் அதில் இருந்தது. இதன் மதிப்பு ரூ. 9 கோடி ஆகும். லாரி உரிமையாளர் நரேந்திரகுமார் சர்மா, இலங்கையைச் சேர்ந்த அப்துல் சலாம் ரஷீத் ஆகியோரையும் அதிகாரிகள் கைது செய்தனர்.
-
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications