கடும் நிபந்தனைகளுடன் வைகோவுக்கு ஜாமீன்
சென்னை:
சென்னையை விட்டு எங்கும் போகக் கூடாது, தினசரி பொடா நீதிமன்றத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும்,பத்திரிக்கைகள், டிவிக்கு பேட்டி தரக் கூடாது என்பது உள்ளிட்ட கடுமையான நிபந்தனைகளுடன் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு பொடா நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது..
இந்த நிபந்தனைகளுக்கு வைகோ ஒத்துக் கொண்டால் மாலை 3 மணிக்கு தீர்ப்பை அறிவிப்பதாக நீதிபதிராஜேந்திரன் தெரிவித்தார்.
நீதிபதி ராஜேந்திரன் விதித்துள்ள கடுமையான நிபந்தனைகளின் விவரம்:
* இந்த வழக்கை ஜூன் 30ம் தேதிக்குள் தினந்தோறும் விசாரித்து முடிக்க வேண்டும் என உயர் நீதிமன்றம்உத்தரவிட்டுள்ளது. இதனால் தனக்கு அரசியல் பணிகள் இருப்பதாகக் கூறி, வழக்கு விசாரணையை ஒத்திவைக்குமாறு வைகோ கோரக் கூடாது.
* தனக்குப் பதிலாக வழக்கறிஞரை நீதிமன்றத்தில் ஆஜராக அனுமதி கோரக் கூடாது.
* சென்னை நகர்ப் பகுதியைவிட்டு வெளியே செல்லக் கூடாது.
* அனைத்து நீதிமன்ற வேலைநாட்களிலும் பொடா நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும். மற்ற நாட்களில் நகரமாஜிஸ்திரட்ே நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும்.
* பத்திரிக்கை, டிவிக்கு தனது வழக்குத் தொடர்பான பேட்டிகள் தரக் கூடாது. தன் சார்பில் யாரையும் பேட்டி தரவும்அனுமதிக்கக் கூடாது. அறிக்கை வெளியிடக் கூடாது
* தடை செய்யப்பட்ட எந்த இயக்குத்துடனும் தொடர்பு வைத்துக் கொள்ளக் கூடாது.
* தனக்கு எதிரான சாட்சிகளைத் தொடர்பு கொள்ளவோ, சாட்சியங்களில் தலையிடவோ கூடாது.
* தனது பாஸ்போர்ட்டையும் வைகோ நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும்.
* பொதுக் கூட்டங்களில் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகவோ, தனது வழக்கு குறித்தோ பேசக் கூடாது.
இவ்வாறு வைகோவுக்கு நிபந்தனைகள் விதித்த நீதிபதி, இந்த நிபந்தனைகளுக்குக் கட்டுப்படுவதாக அபிடவிட்தாக்கல் செய்தால் மட்டுமே ஜாமீன் சாத்தியமாகும் என்று அறிவித்தார்.
நீதிபதியின் நிபந்தனைகளை கேட்டு அதிர்ச்சியுற்ற வைகோ, இதுதொடர்பாக தனது வழக்கறிஞர்களுடன்ஆலோசித்துவிட்டு முடிவை தெரிவிப்பதாகக் கூறி விட்டு நீதிமன்றத்தை விட்டு வெளியேறினார்.
இதையடுத்து நீதிமன்ற வளாகத்தில் தனது வழக்கறிஞர்களுடன் அவர் தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார்.
தடை செய்யப்பட்ட விடுதலைப்புலிகளை ஆதரித்துப் பேசியதாக வைகோ உள்ளிட்ட மதிமுகவினர் 9 பேர் 2002ம்ஆண்டு ஜூலை மாதம் பொடா சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டனர். சிறை சென்று 18 மாதங்கள் ஆன நிலையில்வைகோ தவிர, மற்ற 8 பேரும் கடந்த ஜனவரி 12ம் தேதி உயர் நீதிமன்ற ஜாமீனில் வெளியே வந்தனர்.
அவர்களுக்கு பெரிய அளவில் நிபந்தனைகள் விதிக்கப்படவில்லை. தங்களது வழக்கு குறித்து பத்திரிக்கைகள்,டிவிகளுக்கு பேட்டி தரக்கூடாது என்று மட்டுமே நிபந்தனை விதிக்கப்பட்டது.
இந் நிலையில் வைகோவும் ஜாமீன் கோரி, பூந்தமல்லி பொடா நீதிமன்றத்தில் ஜனவரி 13ம் தேதி மனுத் தாக்கல்செய்தார். இம்மனு மீதான விசாரணை கடந்த மாதம் 21 மற்றும் 27ம் தேதிகளில் நடைபெற்றது.
அப்போது வைகோ தானே ஆஜராகி தனக்காக வாதாடினார். தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் என்.ஆர்.சந்திரன் ஆஜராகி அரசுக்காக வாதாடினார். இதையடுத்து தீர்ப்பை நீதிபதி ராஜேந்திரன் பிப்ரவரி 3ம் தேதிக்கு(இன்று) ஒத்தி வைத்தார்.
இதைத் தொடர்ந்து இன்று இந்த மனு மீது தீர்ப்பு வழங்கப்பட்டது. நீதிபதி ராஜேந்திரன் வைகோவுக்கு கடும்நிபந்தனைகளுடன் கூடிய ஜாமீன் வழங்கி தீர்ப்பு கூறினார்.
நீதிபதி கூறுகையில், தனக்கு ஜாமீன் வழங்கப்பட்டால் நீதிமன்றத்தின் நிபந்தனைகளுக்குக் கட்டுப்பட்டு நடப்பேன்என்று வைகோ தனது ஜாமீன் மனுவில் குறிப்பிடவில்லை. இதை அரசு வழக்கறிஞர் என்.ஆர். சந்திரன் தனதுவாதத்தின்போது சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனால் நிபந்தனைகளுக்குக் கட்டுப்படுவதாக முதலில் அபிடவிட் தாக்கல் செய்ய வேண்டும். அதன் பின்னர் ரூ.50,000க்கு சொந்த ஜாமீனும், அதே தொகைக்கு மேலும் இருவரின் உத்தரவாதத்தையும் தாக்கல் செய்தால் தான்வைகோவின் ஜாமீன் அமலுக்கு வரும் என்றார்.
நிபந்தனைகள் மிகக் கடுமையாக இருப்பதால், வெளியே வந்தும் முழுமையான அளவில் அரசியல்பணியாற்றுவதும் சாத்தியமில்லை என்பதால் இந்த ஜாமீனை வைகோ ஏற்கமாட்டார் என்று கருத்து நிலவியது.ஆனால் வைகோ நிபந்தனைகளை ஏற்பதாக உதிெமொழிப்பத்திரம் தாக்கல் செய்தார். இதனையடுத்து வைகோஇன்று மாலையோ அல்லது நாளை காலையோ விடுதலையாவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications