சட்டசபை கூடியது: ஆளுநர் உரையை புறக்கணித்து எதிர்க் கட்சிகள் வெளிநடப்பு
சென்னை:
தமிழக சட்டமன்றத்தின் குறுகிய காலக் கூட்டத் தொடர் இன்று காலை தொடங்கியது.
ஆளுனர் ராம்மோகன் ராவின் உரையுடன் தொடங்க இருந்த கூட்டத்தை அனைத்து எதிர்க் கட்சி எம்.எல்.ஏக்களும்ஒட்டுமொத்தமாகப் புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர்.
இன்று காலை அவை கூடியதும், ஆளுநரை முதல்வர் ஜெயலலிதாவும் சபாநாயகர் காளிமுத்துவும் முறைப்படிஅழைத்துக் கொண்டு அவைக்குள் வந்தனர்.
அப்போது எழுந்த திமுக சட்டமன்றக் கட்சித் தலைவரும் எதிர்க் கட்சித் தலைவருமான அன்பழகன், இந்தஆட்சியில் மக்கள் பட்டுவரும் அவதிகளை சொல்லி மாளாது. அவ்வளவு பிரச்சனைகள். குடிக்கத் தண்ணீர்இல்லாமல் மக்கள் அல்லாடிக் கொண்டிருக்கிறார்கள்.
மக்களின் மிக அடிப்படைசயான ஜனநாயக உரிமைகள் கூட பறிக்கப்படுகின்றன. காவிரியில் தமிழகத்துக்குஉரிய நீரை வாங்க இந்த அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மக்களின் பிரச்சனைகள் குறித்து இந்தஅரசுக்கு கவலையும் இல்லை. இதனால், அவையில் இருந்து வெளிநடப்பு செய்கிறோம் என்று சொல்லிவிட்டுதிமுக எம்.எல்.ஏக்களுடன் வெளிநடப்பு செய்தார்.
அவரைத் தொடர்ந்து காங்கிரஸ் தலைவர் எஸ்.ஆர். பாலசுப்பிரமணியம் தலைமையில் அக் கட்சியினரும், பா.ம.க.தலைவர் ஜி.கே. மணி தலைமையில் அக் கட்சி எம்.எல்.ஏக்களும், சிபிஎம் தலைவர் ஹேமச்சந்திரன் தலைமையில்அக் கட்சியினரும், பழனிச்சாமி தலைமையில் சிபிஐ கட்சியின் எம்.எல்.ஏக்களும் அரசைக் கண்டித்தவாறேவெளிநடப்பு செய்தனர்.
இப்போது இந்தக் கட்சிகள் அனைத்தும் மக்களவைத் தேர்தலுக்காக திமுக அமைத்துள்ள கூட்டணியில் இடம்பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
ராமதாசுடனான மோதல் காரணமாக அதிமுகவை ஆதரித்து வரும் பாமக உறுப்பினர் முருகவேல் ராஜன் மட்டும்வெளிநடப்பில் கலந்து கொள்ளவில்லை.
11.10 மணிக்கு பா.ஜ.க. தவிர்த்த அனைத்து எதிர்க் கட்சி எம்.எல்.ஏக்களும் வெளிநடப்பு செய்துவிட்ட பின்ஆளுனர் ராம்மோகன் ராவ் தனது உரையைப் படிக்க ஆரம்பித்தார்.
நேற்று செய்தியாளர்களிடம் பேசிய சபாநாயகர் காளிமுத்து, காலை 11 மணிக்கு ஆளுநர் ராம் மோகன் ராவின்உரையுடன் கூட்டத்தொடர் தொடங்கும். ஆளுநர் உரையை எதிர்க்கட்சிகள் புறக்கணித்து வெளிநடப்புச்செய்யாமல் இருந்தால், ஆளுநர் உரை தமிழில் படிக்கப்படும். இல்லாவிட்டால் தமிழில் உரை படிக்கப்பட்டதாகபதிவு செய்யப்படும் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தது.
இதனால் ஆளுநர் உரை தமிழில் படிக்கப்படாது என்று தெரிகிறது.
ஆளுநர் உரைக்குப் பின் சட்டசபை ஒத்திவைக்கப்பட்டு 5,6,7,9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் கூட்டத் தொடர்நடக்கும். இதில் 3 நாட்கள் மட்டுமே கேள்வி நேரம் இடம்பெறும். 10ம் தேதி ஆளுநர் உரை மீதான விவாதத்திற்குமுதல்வர் ஜெயலலிதா பதில் அளிப்பார். அன்றைய தினமே கூட்டத் தொடர் முடிவடையும்.
கடந்த சட்டமன்றக் கூட்டத்தின்போதும் ஆளுநர் உரை தமிழில் படிக்கப்படவில்லை என்று எதிர்க் கட்சிகள்பிரச்சனை கிளப்பின. மேலும் கடந்த சட்டமன்றக் கூட்டத்தின் கடைசி நாளன்று தான் இந்து, முரசொலி பத்திரிக்கைஆசிரியர்களைக் கைது செய்யச் சொல்லி உத்தரவு போட்டார் காளிமுத்து.
பின்னர் உச்ச நீதிமன்றத்தில் இந்து நடத்திய சட்டப் போராட்டம் காரணமாக, தமிழக அரசு பணிந்ததுகுறிப்பிடத்தக்கது. மக்களவைக்கு தேர்தல் நடைபெற உள்ளதால், இந்தக் கூட்டத் தொடரின்போது பல சலுகைத்திட்டங்களை ஜெயலலிதா அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications