இன்று மாலை கூடுகிறது அதிமுக பொதுக்குழு
சென்னை:
சென்னை அருகே கொளப்பாக்கத்தில் இன்று மாலை அதிமுகவின் பொதுக்குழு மற்றும் செயற்குழுக் கூட்டம்நடைபெறுகிறது.
காஞ்சிபுரம் மாவட்டம் கொளப்பாக்கத்தில் அதிமுக நிர்வாகிகள் நேர்காணல் நிகழ்ச்சியை கடந்த இரு மாதங்களாகநடத்தி வந்தார் ஜெயலலிதா. இதைத் தொடர்ந்து இன்று மாலை செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டத்தைக்கூட்டிள்ளார்.
நிதியமைச்சரும், அதிமுக அவைத் தலைவருமான பொன்னையன் தலைமையில் மாலை 5 மணிக்கு இக் கூட்டங்கள்தொடங்கவுள்ளன. ஜெயலலிதா உள்ளிட்ட செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் இக்கூட்டத்தில்பங்கேற்க உள்ளனர்.
பா.ஜ.க. கூட்டணி, தொகுதிகள் ஒதுக்கீடு, தேர்தல் உத்திகள், வேட்பாளர் தேர்வு உள்ளிட்ட பல்வேறு முக்கியவிஷயங்கள் குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளன.
பழைய பல்லவி பாடும் எதிர்க் கட்சிகள்: ஜெ.
இதற்கிடையே இன்று கூடிய சட்டசபைக் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்த எதிர்க் கட்சிகளை முதல்வர்ஜெயலலிதா கடுமையாக விமர்சித்தார்.
சட்டசபைக் கூட்டத்திற்குப் பின் வெளியே வந்த ஜெயலலிதா கூறியதாவது:
ஆளுநர் உரை நிகழ்த்தும்போது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநிடப்புச் செய்வது வழக்கமாகி விட்டது. இதற்குஎப்போதும் ஒரே காரணத்தையே அவர்கள் கூறுகிறார்கள். அரசு மீது எப்போதும் புகார் கூறுவதே அவர்களுக்குவழக்கம். எனவே இப்போது கூறும் குற்றச்சாட்டுக்களும் புதிதல்ல. பழைய பல்லவியைத்தான் எப்போதும்பாடுகிறார்கள் என்றார்.
வைகோ, நக்கீரன் கோபால் ஆகியோர் மீதான வழக்குகளை பொடா மறு ஆய்வுக் குழு தொடர்ந்து விசாரிக்கலாம்என்று சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளதே என்று கேட்டபோது, அந்தத் தீர்ப்பின் முழு விவரத்தை நான்இன்னும் விரிவாகப் படிக்கவில்லை என்று பதில் தந்தார் ஜெயலலிதா.
-
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications