சென்னை- பெங்களூர் ஜெட் ஏர்வேஸ் விமான என்ஜினில் நடுவானில் தீ விபத்து
சென்னை:
சென்னையில் இருந்து பெங்களூர் புறப்பட்ட ஜெட் ஏர்வேஸ் விமானத்தின் என்ஜினில் நடுவானில் தீப் பிடித்தது.இதையடுத்து அந்த விமானம் உடனடியாக சென்னை விமான நிலையத்திலேயே மிக அவசரமாகத்தரையிறங்கியது. இதனால் 130 பயணிகளும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
இன்று காலை 6.20 மணிக்கு அந்த விமானம் மீனம்பாக்கத்தில் இருந்து பெங்களூர் புறப்பட்டது. அதில் நடிகர்அர்ஜூன் உள்பட 130 பேர் இருந்தனர். வானில் பறக்க ஆரம்பித்த இருபதாவது நிமிடத்தில் அதன் இடப் பக்கஎன்ஜினில் தீப் பிடித்துக் கொண்டது.
இதையடுத்து ஒற்றை என்ஜினின் இயக்கத்துடன் அந்த விமானம் மீண்டும் சென்னைக்குத் திரும்பியது. தீப்பிடித்தநிலையில் விமானம் திரும்பியதால், விமான நிலையத்தில் எமர்ஜென்சி லேண்டிங்குக்கான ஏற்பாடுகள்செய்யப்பட்டன.
எந்தவிதமான பிரச்சனையும் இன்றி அந்த விமானம் பத்திரமாக தரையிறங்கியது. பயணிகள் அதிலிருந்துஅவசரமாக வெளியேற்றப்பட்டு தீயும் அணைக்கப்பட்டது. பின்னர் அந்தப் பணிகள் வேறு விமானம் மூலம்பெங்களூருக்கு அனுப்பப்பட்டன.
கோளாறு சரி செய்யப்பட்ட அந்த ஜெட் ஏர்வேஸ் விமானம் காலை 9.15க்கு மீண்டும் பெங்களூர் புறப்பட்டது.


Click it and Unblock the Notifications
