கருணாநிதி கொடும்பாவியை எரிக்கும் காங்கிரசார்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

திமுக கூட்டணியில் நமக்கு விரும்பிய தொகுதிகள் கிடைக்காததால், மனம் தளர்ந்துவிட வேண்டாம் என்றுகாங்கிரஸ் தொண்டர்களுக்கு அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் கமல்நாத் வேண்டுகோள்விடுத்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் கோட்டைகள் எனக் கருதப்படும் பாண்டிச்சேரி, திருச்சி உள்ளிட்ட சில தொகுதிகள்அக்கட்சிக்கு கிடைக்கவில்லை. இதனால் காங்கிரஸார் அப்செட் ஆகியுள்ளனர்.

மேலும் அதிமுக கோட்டையான பெரிகுளம் போன்ற இடங்கள் காங்கிரஸ் தலையில் கட்டப்பட்டுள்ளன.இங்கெல்லாம் காங்கிரசுக்கு தோல்வி உறுதி என்று கருதப்படுகிறது.

இதனால் திமுக மீது காங்கிரஸ் தொண்டர்களிடையே கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. குறிப்பாக நாகர்கோவில்,திருச்சி, திருச்செந்தூர், பாண்டிச்சேரி ஆகிய இடங்களில் கருணாநிதியின் உருவ பொம்மையோடு, கூட்டணி பேசியகமல்நாத்தின் கொடும்பாவியையும் காங்கிரசார் எரித்துள்ளனர்.

இந்தத் தொகுதிகளில் திமுகவை, பா.ம.க, மதிமுகவை எதிர்த்துப் போட்டியிடப் போவதாக அப் பகுதி காங்கிரசார்அறிவித்துள்ளனர்.

இந் நிலையில் தான் தொண்டர்களுக்கு தைரியம் சொல்லி அறிக்கை வெளியிட்டுள்ளது காங்கிரஸ். தமிழககாங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் மூலமாக கமல்நாத் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

காங்கிரஸ் தோழர்கள் அனைவரும் அமைதி காக்க வேண்டும். மத்தியில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சியைக் கொண்டுவர வேண்டும் என்பதில் சோனியா காந்தி உறுதியாக உள்ளார். அதற்காகத்தான் இந்தக் கூட்டணிஅமைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள எதிர்க்கட்சிகள் அனைத்தையும் கருணாநிதி ஒருங்கிணைத்து இந்த கூட்டணியைஉருவாக்கியுள்ளார். கூட்டணியில் இடம்பெறும்போது சில தொகுதிகள் கிடைக்காமல் போவது சகஜம்தான்.அதனால் மனம் தளர்ந்து விடக் கூடாது.

வெற்றியை மட்டுமே மனதில் கொண்டு உறுதியுடன் பணியாற்ற வேண்டும் என்று கூறியுள்ளார்.

திமுக விண்ணப்ப மனு தாக்கல்:

நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட விரும்பும் திமுகவினர் இன்று முதல் விண்ணப்பங்களை தாக்கல் செய்யத்தொடங்கியுள்ளனர்.

திமுக 15 இடங்களில் போட்டியிடுகிறது. இந்தத் தொகுதிகளில் போட்டியிட விரும்பும் திமுகவினர் இன்று முதல் 3நாட்களுக்கு ரூ. 10,000 பணம் கட்டி விண்ணப்பிக்கலாம் என்று திமுக தலைமைக் கழகம் அறிவித்திருந்தது.

அதன்படி இன்று காலை முதல் அண்ணா அறிவாலயத்தில் விண்ணப்ப மனு விற்பனை தொடங்கியது.ஏராளமானோர் பணம் கட்டி விண்ணப்பங்களைக் கொடுத்தனர்.

வரும் 10ம் தேதி முதல் விண்ணப்பித்தவர்களிடம் நேர்காணல் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. அதன் பிறகுவேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டு, விருதுநகரில் நடைபெறவுள்ள திமுக தென் மண்டல மாநாட்டின்போதுபட்டியலை வெளியிடவுள்ளார் திமுக தலைவர் கருணாநிதி.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+