பொடா: திமுகவின் இரட்டை வேடமும்.. அதிமுகவின் பல வேஷமும்
சென்னை:
பொடா விஷயத்தில் திமுக இரட்டை வேடம் போடுவதாக சட்டமன்றத்தில் அதிமுக குற்றம் சாட்டியது.
இதையடுத்து பொடா விஷயத்தில் அதிமுக பல வேஷங்கள் போடுவதாக திமுக பதில் குற்றம் சாட்டியது.
ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது இன்று பேசிய நலத்துறை அமைச்சர் தளவாய் சுந்தரம்,மக்களவையில் பொடா சட்டத்தை ஆதரித்து ஓட்டு போட்ட திமுக தமிழகத்தில் மட்டும் அந்தச் சட்டத்தைஎதிர்க்கிறது. இந்த விஷயத்தில் திமுகவின் இரட்டை வேடம் வெட்ட வெளிச்சமாகிவிட்டது என்றார்.
அப்போது இடைமறித்துப் பேசிய திமுக எம்.எல்.ஏ. துரைமுருகன், எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை ஒடுக்கத்தான் பொடா சட்டம் கொண்டு வருவதாக சொன்னார்கள். அதனால் அதை நாட்டு நலன் கருதி ஆதரித்தோம்.ஆனால், தமிழகத்தில் நீங்கள் என்ன செய்தீர்கள்.
அந்த பயங்கர சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்தினீர்கள். இதனால் தான் அதை எதிர்த்தோம். சட்டத்தையேவாபஸ் பெறச் சொன்னோம். அதை மத்திய அரசு கேட்கவில்லை. இதனால் கூட்டணியை விட்டு வெளியேவந்துவிட்டோம். இதில் எங்கே இருக்கிறது இரட்டை நிலையும், இரட்டை வேடமும். திமுகவின் நிலை மிகத்தெளிவாகவே இருக்கிறது.
நீங்கள் (அதிமுக) ஏன் அந்தச் சட்டத்தை ஆதரித்தீர்கள். நாங்கள் இரட்டை வேடம் போடுவதாக நீங்கள்சொல்கிறீர்கள். பொடா விஷயத்தில் நீங்கள் பல வேஷம் போட்டுக் கொண்டிருக்கிறீர்கள் என்றார்.
முன்னதாகப் பேசிய திமுக எம்.எல்.ஏ. புகழேந்தி, பொடா சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்தியற்காக இந்த அரசைஉச்ச நீதிமன்றமே கண்டித்துள்ளது என்றார்.
அப்போது இடைமறித்த சட்ட அமைச்சர் ஜெயக்குமார், உச்ச நீதிமன்றம் கண்டிக்கவில்லை. தனது கருத்தைத் தான்தெரிவித்தது என்றார்.
-
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது












Click it and Unblock the Notifications