அத்வானி பிரதமராக ஜெயலலிதாவுக்கு ஆசை: கருணாநிதி
சென்னை:
சோனியா காந்தி வெளிநாட்டவர் என்பது அவருடன் 1999ம் ஆண்டில் கூட்டணி அமைக்கும்போதுஜெயலலிதாவுக்குத் தெரியாதா என்று கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.
வரும் தேர்தலில் சோனியா வெளிநாட்டவர் என்பதையே பிரதானமாக வைத்து பிரச்சாரத்தில் அதிமுக ஈடுபடும்என முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
இதைடுத்து திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
வாஜ்பாய் அரசை 1999ம் ஆண்டு சோனியாவுடன் சேர்ந்து கவிழ்த்த ஜெயலலிதாவுக்கு, அப்போது அவர்வெளிநாட்டவர் என்று தெரியாதா?.
பிரதமர் வாஜ்பாய் காவிரிப் படுகை மாவட்டங்களுக்கு வந்தால் விவசாயிகள் விரட்டி அடிபார்கள் என்று கடந்தநவம்பர் மாதம் தான் இதே ஜெயலலிதா சட்டசபையில் பேசினார். இப்போது வாஜ்பாயுடன் அவர் கூட்டணிசேர்ந்து கொண்டுள்ளது எந்த வகையில் நியாயம்?
அத்வானியைப் பிரதமராக்க வேண்டும் என்ற கோரிக்கையைத் தான் சோனியா பிரதமராகக் கூடாது என்றகோஷத்தில் மறைத்து வைத்துக் கொண்டு பேசி வருகிறார் ஜெயலலிதா.
சோனியா காந்தியை வெளிநாட்டவர் என்ற அநாகரீகமான பிரச்சாரத்தில் திமுக எந்தக் காலத்திலும் ஈடுபட்டதும்இல்லை. ஈடுபடவும் மாட்டோம். அவர் இந்த நாட்டிற்கு மருமகளாய் வந்தவர். அதை மறந்துவிட்டு அவரை எப்படிவிமர்சிக்கலாம் என்று கேட்டுள்ளார் கருணாநிதி.
-
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக












Click it and Unblock the Notifications