கோபியை கேட்கும் இளங்கோவன்: தர விடுவாரா வாசன்?
சென்னை:
நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட விரும்பும் காங்கிரஸார் இன்று முதல் விண்ணப்பிக்கத் தொடங்கியுள்ளனர்.
நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 10 இடங்களில் போட்டியிடவுள்ளது. தொகுதிப் பங்கீடுமுடிவடைந்துள்ள நிலையில் போட்டியிட விரும்புவோர் ரூ. 5,000 கட்டி இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்றுகாங்கிரஸ் தலைவர் வாசன் அறிவித்திருந்தார்.
அதன்படி இன்று முதல் விண்ணப்ப விற்பனை தொடங்கியது. கட்சியின் தலைமை அலுவலகமான சென்னைசத்தியமூர்த்தி பவனில் விண்ணப்பங்கள் விற்கப்படுகின்றன. முன்னாள் தலைவர் தங்கபாலு சார்பில் சேலம்தொகுதியில் போட்டியிட சிலர் மனு செய்தனர்.
அதேபோல, கோபிச் செட்டிப்பாளையத்தில் போட்டியிட, முன்னாள் செயல் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்சார்பில் சிலர் விண்ணப்பித்தனர்.
இதற்கிடையே, வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட புதுமுகங்களுக்கு அதிக வாய்ப்பு தரதிட்டமிட்டுள்ளதாக வாசன் கூறியுள்ளார்.
செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், நாடாளுமன்றத் தேர்தலில் புதுமுகங்களை நிறுத்தலாம் என்ற யோசனைஉள்ளது. திமுக, காங்கிரஸ் கூட்டணி மகத்தான சாதனை படைக்கும். இதை விமர்சிப்பவர்கள்தான் வீழ்வார்கள்.அதிமுக, பா.ஜ.கவின் அவதூறுகளை மக்கள் ஏற்க மாட்டார்கள் என்றார்.
கோபிச்செட்டிப்பாளையத்தில் போட்டியிட இளங்கோவனும், நீலகிரியில் போட்டியிட அவரது ஆதரவாளரானபிரபுவும் திட்டமிட்டுள்ள நிலையில், புதுமுகங்களுக்கே சீட் என்று வாசன் கூறுவன் இவர்களுக்கு செக் வைக்கவேஎன்று தெரிகிறது.
ஆனால், திமுக கூட்டணிக்கு 3 வருடங்களுக்கு முன்பே அடிபோட்டவர் என்ற வகையில் இளங்கோவனுக்கு கட்சிமேலிடம் கட்டாயம் சீட் தரும், மேலும் இளங்கோவனுக்காக கருணாநிதியும் சோனியாவிடம் பரிந்துரைப்பார் எனஅவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.
கோபிச்செட்டிப்பாளையத்தில் இளங்கோவன் போட்டியிடலாம் என நம்பும் அதிமுக அவருக்கு எதிராக, அவரதுதாயார் சுலோச்சான சம்பத்தை களமிறக்கத் திட்டமிட்டுள்ளது.
தாமரைக்கனிக்கு எதிராக மகனை களமிறக்கிய முதல்வர் ஜெயலலிதா, இப்போது இளங்கோவனுக்கு எதிராகதாயாரை இறக்கத் முடிவு செய்துள்ளார்.
ரங்கசாமியை சந்திக்க மறுத்த சோனியா:
இதற்கிடையே பாண்டிச்சேரி முதல்வர் ரங்கசாமியை சந்திக்க நேரமில்லை என்று காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி கூறி விட்டதால், பெரும் ஏமாற்றத்துடன் அவர் பாண்டிச்சேரி திரும்பினார்.
பாண்டிச்சேரி காங்கிரஸ் கட்சியிலிருந்து கண்ணன் விலகியிருப்பது, அவரது ஆதரவு அமைச்சர்கள் இரண்டு பேர்ராஜினாமா செய்துள்ளது, புதுவை நாடாளுமன்றத் தொகுதியை பா.ம.கவுக்கு திமுக ஒதுக்கியது தொடர்பானகுழப்பம் ஆகியவை குறித்து கட்சித் தலைவர் சோனியா காந்தியுடன் விவாதிப்பதற்காக ரங்கசாமி டெல்லிசென்றிருந்தார்.
ஆனால் சோனியா காந்தியை சந்திக்க அவருக்கு நேரம் ஒதுக்கப்படவில்லை. சோனியா காந்தி தேர்தல் மற்றும்நாடாளுமன்றக் கூட்டம் தொடர்பாக பிஸியாக இருப்பதால் நேரம் ஒதுக்க முடியாது என்று மேலிடம் கூறிவிட்டது.
இதனால் காத்திருந்து, காத்திருந்து ஏமாற்றமடைந்த ரங்கசாமி பாண்டிச்சேரிக்குத் திரும்பிவிட்டார். கண்ணனைகட்சியில் தொடர்ந்து வைத்திருக்க ரங்கசாமி உரிய நடவடிக்கைகள் எடுக்கவில்லை என அவர் மீது சோனியாஅதிருப்தியில் இருப்பதாகக் கூறப்படுகிறது.
-
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications