கர்நாடகம் தனி நாடா?: பொன்னையன் பாய்ச்சல்
சென்னை:
காவிரிப் பிரச்சனையில் கர்நாடக அரசு தனி நாடு போல செயல்படுகிறது. நீதிமன்றம் உள்பட யாருடையபேச்சையும் அது கேட்பதில்லை என்று நிதியமைச்சர் பொன்னையன் கடுமையாக குற்றம் சாட்டினார்.
தமிழக சட்டசபையில், ஆளுநிர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது நடந்த விவாதத்தில் திமுக, இந்தியகம்யூனிஸ்ட் கட்சி உறுபினர்களின் பேச்சின்போது குறுக்கிட்டு நிதியமைச்சர் பொன்னையன் நெருக்கடிகாலத்தின்போது பகிர்ந்து கொள்ள வேண்டிய 89.771 டிஎம்சி தண்ணீரைக் கூட விட கர்நாடகம் மறுக்கிறது.
காவிரி நீர் ஆணையம், நடுவர் மன்றம், உச்ச நீதிமன்றம் என யாருடைய உத்தரவுக்கும் கீழ்ப்படிய கர்நாடகம்மறுக்கிறது. தனி நாடு போல அது செயல்படுகிறது. மேலும், காவிரிப் பாசனப் பகுதிகளையும் அதிகரித்துள்ளது. 5லட்சமாக இருந்த கர்நாடக காவிரிப் படுகை விவசாய நிலங்கள் தற்போது 22 லட்சம் ஏக்கராக அதிகரித்துவிட்டது.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தனது செல்வாக்கைப் பயன்படுத்தி கர்நாடகத்தை தண்ணீர் திறந்து விடச்செய்யலாம். ஆனால் அவர் அப்படிச் செய்ய மறுத்து வருகிறார். தமிழகத்தில் வாடும் பயிர்களைக் காக்க அவர்நினைத்தால் முடியும், ஆனால் செய்யத் தவறி விட்டார்.
காவிரிப் பிரச்சினை குறித்து தமிழக அரசைக் குறை கூறிப் பேசும் இந்திய கம்யூனிஸ்ட் உறுப்பினர்சிவபுண்ணியத்தைப் பார்த்துக் கேட்கிறேன். காங்கிரஸ் கட்சியின் போக்குக்கு எதிர்ப்பு தெரிவித்து, அந்தக் கட்சிஇடம் பெற்றுள்ள கூட்டணியிலிருந்து நீங்கள் விலகத் தயாரா?
காங்கிரஸ் கட்சியும், சோனியா காந்தியும், காங்கிரஸுடன் கூட்டு சேர்ந்துள்ள சில கட்சிகளும்தான் காவிரிப்பாசனப் பகுதி விவசாயிகளின் துயர நிலைக்குப் பொறுப்பேற்க வேண்டும் என்றார் பொன்னையன்.
திமுக உறுப்பினர் துரைமுருகன் பேசுகையில், பா.ஜ.கவுடன் உறவை புதுப்பித்துக் கொண்டுள்ள அதிமுக, தனதுசெல்வாக்கைப் பயன்படுத்தி, மத்திய அரசிடம் பேசி உடனடியாக காவிரி நீரை கர்நாடகம் திறந்து விட வழிசெய்யலாமே என்றார்.
-
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
மாடு பலியிட தடை.. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்! அமைச்சர் ஷாஜஹான் உறுதி -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
"உண்மையை சொல்ல தைரியம் இல்லை".. ஜனநாயகன் ரிலீஸ் எப்போது? நொந்துபோய் எச் வினோத் சொன்ன பதில் -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!











Click it and Unblock the Notifications