காணாமல் போன பா.ம.க. சைக்கிள்கள்
சென்னை:
சட்டசபைக்கு வருவதற்காக தாங்கள் பயன்படுத்திய சைக்கிள்களைக் காணவில்லை என்று பா.ம.க. எம்.எல்.ஏக்கள்சபாநாயகர் காளிமுத்துவிடம் புகார் தெரிவித்தனர். இதனால் சட்டசபையில் பெரும் சிரிப்பொலி எழுந்தது.
சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக பாமக எம்.எல்.ஏக்கள் இந்தக் கூட்டத் தொடர் முழுவதும்சைக்கிளில் சட்டசபைக்கு வர முடிவு செய்துள்ளனர். அதன்படி கடந்த 2 நாட்களாக அவர்கள் சைக்கிள்களிலேயேசட்டசபைக்கு வந்து செல்கின்றனர்.
இரு நாட்களாக சைக்கிள்களை சபை வளாகத்தில் உள்ள கார் பார்க்கிங் பகுதியில் ஸ்டாண்ட் போட்டுவிட்டுஉள்ளே சென்றனர். இந் நிலையில் அந்த சைக்கிள்கள் திடீரென காணாமல் போயின.
இதை சட்டசபையில் ஒரு ஒழுங்குப் பிரச்சினையாகக் கிளப்பினார் பா.ம.க தலைவர் ஜி.கே.மணி. அவர்கூறுகையில், சுற்றுச்சூழல் தூய்மையை வலியுறுத்தும் வகையில் பா.ம.க. எம்.எல்.ஏக்களாகிய நாங்கள்சைக்கிள்களில் சட்டசபைக்கு வந்தோம். அமைதியான முறையில் எங்கள் சைக்கிள் பேரணி நடந்தது. கோட்டையில்சைக்கிள்களை நிறுத்திவிட்டு, சட்டசபை நிகழ்ச்சிகளில் பங்கேற்றோம். திடீரென அவற்றைக் காணவில்லை.
எங்களது சைக்கிள்களை போலீஸார்தான் தூக்கிச் சென்றுள்ளனர். சபாநாயகர் காளிமுத்து தலையிட்டுசைக்கிள்களை மீட்டுத் தர வேண்டும் என்றார்.
இதைக் கேட்டதும் சபாநாயகர் உள்பட சபையில் இருந்த அனைவரும் சிரித்தனர். அதிமுக எம்.எல்.ஏக்கள்பகுதியில் வெடிச் சிரிப்பு கிளம்பியது.
அப்போது பேசிய சபாநாயகர் காளிமுத்து, சைக்கிள்களைக் காணவில்லை என்றால் போலீஸில் புகார்தெரிவியுங்கள். இது சட்டசபைக்குத் தொடர்பான விஷயம் இல்லை என்றார்.
அப்போது எழுந்த திமுக உறுப்பினர் துரைருகன், இது ரொம்பவும் அவமானகரமான விஷயம். சட்டசபைவளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த சைக்கிள்களை காணவில்லை என்பது அசிங்கமாக இருக்கிறது. சட்டசபையில்நிறுத்தப்பட்டிருந்த எத்தனையோ சைக்கிள்கள் பத்திரமாக இருக்கின்றன. பா.ம.கவினரின் சைக்கிள்கள் மட்டும்திட்டமிட்டு எடுத்துச் செல்லப்பட்டிருக்கின்றன. வேண்டும் என்றே போலீஸார் இதுபோல செய்திருக்கிறார்கள்என்றார்.
அப்போது பேசிய சபாநாயகர் காளிமுத்து, இது குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
கார் பார்க்கிங் பகுதியில் நிறுத்தப்பட்டதால்தான் பா.ம.கவினரின் சைக்கிள்களை போலீசார் அங்கிருந்துஅகற்றியதாகத் தெரிகிறது.
சைக்கிள்களில் பா.ம.க. எம்எல்ஏக்கள் வந்ததால் அவர்களுக்கு நல்ல விளம்பரம் கிடைத்தது. இதைப் பொறுக்கமுடியாத அரசு, போலீசாரிடம் சொல்லி சைக்கிள்களை அபேஸ் செய்ததாக பா.ம.கவினர் கூறுகின்றனர்.
-
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
5,000 பேர் மட்டும் தான்.. திருச்சி கிழக்கில் விஜய் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications