போலி பெரிய மனிதர்கள்: கதை சொல்லி கருணாநிதி மீது ஜெ. தாக்கு
தேனி:
ஆண்டிப்பட்டிக்குச் சென்ற முதல்வர் ஜெயலலிதா அங்கு நடந்த அரசு விழாவில் குட்டிக் கதை சொல்லிகூட்டத்தினரை குஷிப்படுத்தினார்.
அரசு விழாக்கள், கட்சி நிகழ்ச்சிகளில் குட்டிக் கதைகளை சொல்வதை ஜெயலலிதா வழக்கமாகக் கொண்டுள்ளார்.அந்த வரிசையில் நேற்று தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள ராஜேந்திரா நகரில் நடந்த அரசுவிழாவில் அவர் வழக்கம் போல குட்டிக் கதை சொல்லி கூட்டத்தினரை அசத்தினார்.
இந்த முறையும் திமுக தலைவர் கருணாநிதி உள்ளிட்டோரை விமர்சிக்காமல் விடவில்லை ஜெயலலிதா.
"அம்மா" சொன்ன கதை இதுதான்:
ஒரு ஊரில் ஒரு ராஜா இருந்தார். அந்த நாட்டில் சிலர் இருந்தனர். தங்களை அறிவில் முதிர்ந்தவர்கள், மிகப்பெரியவர்கள், பணக்காரர்கள் என்று அந்த போலி அறிவுஜீவிகள் தங்களைத் தாங்களே பீற்றிக் கொள்வதுவழக்கம்.
அவர்களது முகத்திரையைக் கிழிக்க முடிவு செய்தார் ராஜா. இதனால் ஒரு நாள் தண்டோரா மூலம், நாட்டில் உள்ளபணக்காரர்கள் அனைவரும் அரசுக்கு பெருமளவு பொருளுதவி செய்யுமாறு கோரிக்கை விடுத்தார்.
உடனே ராஜாவை இந்த போலி அறிவுஜீவிகள் அணுகினர். தாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று ராஜாவிடம்கேட்டனர்.
அதற்கு ராஜா, பொது இடத்தில் வைக்கப்பட்டுள்ள மிகப் பெரிய பாத்திரத்தில் நீங்கள் பால் ஊற்றுங்கள் என்றுராஜா கேட்டுக் கொண்டார். போலி அறிவுஜீவிகள் உடனே கூடி விவாதித்தனர்.
பின்னர், தாங்கள் ஊற்றுவது பால்தானா என்பது யாருக்குத் தெரியும் என்று அவர்களாகவே நினைத்துக் கொண்டுபாலுக்குப் பதில் தண்ணீரை ஊற்றினர். ஆனால் போலி அறிவு ஜீவிகளின் குட்டு உடனே வெளிப்பட்டு விட்டது.இவர்களது சாயம் வெளுத்ததால் மக்கள் அவர்களைத் தூற்றினர்.
அந்த நிலையில்தான் இன்று தமிழகத்திலும் சில போலி அறிவுஜீவிகள் நடமாடி வருகின்றனர். தங்களது வயதுமுதிர்ந்து விட்டதை சாதகமாக்கிக் கொண்டு மக்களை ஏமாற்றி வருகிறார்கள். அவர்களுக்கு வருகிற தேர்தலில்மக்கள் சரியான பாடம் கற்பிப்பார்கள் என்றார் ஜெயலலிதா.
வழக்கமாக எதிர்க் கட்சிகளை விமர்சித்தாலும் கருத்தாழம் மிக்க கதைகளைச் சொல்வார் ஜெயலலிதா. ஆனால்,இந்தக் கதை ஏனோ, தானோவென்றே இருந்ததால் அவர் நினைத்த அளவுக்கு கைத்தட்டல் கூட்டத்தில்கிடைக்கவில்லை.
-
13 மாவட்டங்களில் பெண் கலெக்டர்கள்.. விஜய்யின் சிங்கப்பெண் ரூட்.. மாவட்டம்தோறும் அதிரடி -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
மாடு பலியிட தடை.. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்! அமைச்சர் ஷாஜஹான் உறுதி -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!










Click it and Unblock the Notifications