இலங்கைக்கு கப்பல் போக்குவரத்து: நழுவ விட்டது தமிழகம், தட்டிச் சென்றது கேரளா!
சென்னை:
தூத்துக்குடி, கொழும்பு இடையிலான பயணிகள் கப்பல் போக்குவரத்து காணல் நீராகி விட்டது.
தற்போது திருவனந்தபுரம்-கொழும்புவுக்கு இடையே கப்பல் போக்குவரத்தை மேற்கொள்ள இலங்கை அரசு முடிவுசெய்துள்ளது.
தமிழக அரசு மற்றும் சில அரசியல் கட்சிகளின் எதிர்ப்பு காரணமாக இந்த துரதிர்ஷ்டவசமான நிலைஏற்பட்டுள்ளது. இதனால் தமிழக சுற்றுலா வளர்ச்சி பெரும் சரிவையும், கேரள மாநில சுற்றுலா பெரும்வளர்ச்சியையும் காணும் சூழ்நிலை உருவாகும் என கூறப்படுகிறது.
அத்தோடு இலங்கை-தமிழகம் இடையிலான தமிழர்களின் பயணம் உள்பட பல நல்ல விஷயங்கள் கடலிலேயேமூழ்கடிக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தின் சுற்றுலா வளர்ச்சி, வியாபாரம் ஆகியவற்றை வளர்க்கும் விதத்தில் கொழும்புக்கும், தூத்துக்குடிக்கும்இடையே கப்பல் போக்குவரத்தை மீண்டும் துவங்க இலங்கை அரசு யோசனை தெரிவித்தது. அதன்அடிப்படையில் பூர்வாங்கப் பணிகளும் தொடங்கின. கப்பல் போக்குவரத்து விரைவில் தொடங்கும் என்று கூடஅறிவிக்கப்பட்டது.
இந் நிலையில் கொழும்பு-தூத்துக்குடி கப்பல் போக்குவரத்துக்கு தமிழகத்தில் எதிர்ப்பு கிளம்பியது.
இந்தத் திட்டத்தால் சேது முசத்திரத் திட்டப் பணிகள் பாதிக்கும் என்று கூறி அரசியல் கட்சிகள் எதிர்ப்புதெரிவித்தன. இதனால் இலங்கை அரசு இந்தத் திட்டத்தை ரத்து செய்து விட்டது. தற்போது கொழும்புவுக்கானபயணிகள் கப்பல் போக்குவரத்து கேரளாவுக்கு சென்று விட்டது.
கேரள மாநலத் தலைநகர் திருவனந்தபுரம் அருகே உள்ள விழிஞம் துறைகத்திலிருந்து கொழும்புவுக்கு பயணிகள்கப்பல் சேவை நடைபெறவுள்ளது. இதற்கான அனுமதியை கொழும்பைச் சேர்ந்த கோல்டன் குரூய்ஸ் லைன் என்றநிறுவனம் பெற்றுள்ளது.
வரும் மார்ச் 1ம் தேதி முதல் இந்த கப்பல் சேவை தொடங்குகிறது. முழுவதும் குளிர்சாதன வசதி செய்யப்பட்டகப்பல் இயக்கப்படவுள்ளது. ஒரு மணி நேரத்திற்கு 40 கடல் மைல் வேகத்தில் இந்தக் கப்பல் பயணிக்கும்.
இதனால் திருவனந்தபுரம்-கொழும்பு பயண நேரம் 5 மணி நேரத்திற்கும் குறைவாகவே இருக்கும் என்றுஅறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்திற்குக் கிடைத்த வாய்ப்பு கேரளாவுக்கு போயுள்ளதால் தமிழக சுற்றுலா வளர்ச்சி பாதிக்கப்படும் என்றுகூறப்படுகிறது. இந்தக் கப்பல் சேவை நமக்குக் கிடைத்திருந்தால் ரூ. 3,500 செலவிலேயே கொழும்பு நகருக்குப்போய் திரும்ப முடியும்.
மேலும் விசா கட்டுப்பாடுகளையும் தளர்த்துவதாக இலங்கை அரசு உறுதியளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
-
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
மாடு பலியிட தடை.. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்! அமைச்சர் ஷாஜஹான் உறுதி -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
"உண்மையை சொல்ல தைரியம் இல்லை".. ஜனநாயகன் ரிலீஸ் எப்போது? நொந்துபோய் எச் வினோத் சொன்ன பதில் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!











Click it and Unblock the Notifications