மக்களவை கலைக்கப்பட்டது: ஜனாதிபதி உத்தரவு
டெல்லி:
மக்களவைக்கு முன்கூட்டியே தேர்தல் நடத்த தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு முடிவெடுத்துள்ளதால், 13வதுமக்களவையை ஜனாதிபதி அப்துல் கலாம் இன்று கலைத்து உத்தரவிட்டார்.
மத்திய அமைச்சரவையின் பரிந்துரையை ஏற்று மக்களவை கலைக்கப்பட்டதாக இன்று ஜனாதிபதி மாளிகைஅறிவித்தது.
நேற்று ஜனாதிபதி அப்துல் கலாமை பிரதமர் வாஜ்பாய் நேரில் சந்தித்துப் பேசினார். பிரதமரின் பரிந்துரையைஏற்ற கலாம், நாடாளுமன்றத்தின் மக்களவையை உடனடியாக சஸ்பென்ட் செய்தார். இன்று நாடாளுமன்றத்தைக்கலைப்பதற்கான முறையான மத்திய அமைச்சரவையின் பரிந்துரை ஜனாதிபதியிடம் வழங்கப்பட்டது.
இதையடுத்து அவையை ஜனாதிபதி கலைத்து உத்தரவிட்டார். அடுத்த அரசு அமையும் வரை காபந்து அரசுக்குதொடர்ந்து தலைமை வகிக்குமாறு வாஜ்பாயை கலாம் கேட்டுக் கொண்டுள்ளார்.
அண்மையில் நடந்து முடிந்த வட மாநில சட்டசபைத் தேர்தல்களில் பாரதீய ஜனதாக் கட்சி அமோக வெற்றிபெற்றதையடுத்து, மக்களவைக்கு முன்கூட்டியே தேர்தல் நடத்த மத்திய அமைச்சரவை தீர்மானித்தது.
இதையடுத்து வரும் மார்ச் மாத கடைசி வாரத்தில் அல்லது ஏப்ரல் முதல் வாரத்தில் மக்களவைக்குத் தேர்தல்நடத்தப்படும் என்று தெரிகிறது.
சென்னையில் கலாம்:
இதற்கிடையே ஜனாதிபதி அப்துல் கலாம் இன்று சென்னை வந்தார். இங்கு நடக்கும் பல்வேறு நிகழ்ச்சிகளில்பங்கேற்க வந்துள்ள அவரை விமான நிலையத்தில் ஆளுநர் ராம் மோகன்ராவ், அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்ஆகியோர் வரவேற்றனர்.
-
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
மாடு பலியிட தடை.. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்! அமைச்சர் ஷாஜஹான் உறுதி -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
"உண்மையை சொல்ல தைரியம் இல்லை".. ஜனநாயகன் ரிலீஸ் எப்போது? நொந்துபோய் எச் வினோத் சொன்ன பதில் -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!











Click it and Unblock the Notifications