நடராஜன் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல்: சிபிஐ திடீர் நடவடிக்கை ஏன்?
சென்னை:
லண்டனில் இருந்து முறைகேடாக லக்ஸஸ் கார் இறக்குமதி செய்யப்பட்ட வழக்கில் சசிகலாவின் கணவர் நடராஜன் மீது சிபிஐ குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது.
வரும் மக்களவைத் தேர்தலில் போட்டியிடப் போவதாக தன்னை மிரட்டி வரும் நடராஜனை அடக்கி வைக்க துணைப் பிரதமர் அத்வானி மூலமாக முதல்வர் ஜெயலலிதா தான் இந்த நடவடிக்கையை எடுத்ததாக பரவலாகப் பேசப்படுகிறது.
1994ம் ஆண்டில் ஜெயலலிதா ஆட்சியில் இருந்தபோது லண்டனைச் சேர்ந்த டாக்டர் பாலகிருஷ்ணன் என்பவரது மகன் யோகேஷ் என்பவர் மூலமாக இந்தக் கார் இறக்குமதி செய்யப்பட்டது. இந்தக் காரை சசிகலாவின் அக்காள் மகன் பாஸ்கரனும் நடராஜனும் வாங்கினர்.
புதிய கார் என்று சொன்னால் அதிக வரி கட்ட வேண்டும் என்பதால் பழைய கார் என்று சொல்லி இறக்குமதி செய்தனர். இதனால் அரசுக்கு ரூ. 1.6 லட்சம் வரி ஏய்ப்பு செய்தனர். இது தொடர்பாக சிபிஐ வழக்குப் பதிவு செய்து அது கிடப்பில் போடப்பட்டிருந்தது.
இந்த மோசடியில் நடராஜனுக்கு உதவிய வங்கி அதிகாரியான சுஜரிதா சுந்தர்ராஜன் என்பவர் மீதும் வழக்குப் போடப்பட்டது.
நெடு நாட்களாய் கிடப்பில் இருந்த வழக்கில் சிபிஐ சமீபத்தில் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது.
ஜனனி விஷயத்தில் தன்னை அரசு மிகவும் ஒடுக்கி வருவதால், தேர்தலில் போட்டியிடுவேன் என்றரீதியில் மிரட்ட ஆரம்பித்திருந்தார் நடராஜன். இதனால் அவருக்கு செக் வைக்க சமீபத்தில் தன்னைச் சந்தித்த அத்வானி மூலமாக ஜெயலலிதா இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாகப் பேசப்படுகிறது.
-
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
5,000 பேர் மட்டும் தான்.. திருச்சி கிழக்கில் விஜய் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
"உண்மையை சொல்ல தைரியம் இல்லை".. ஜனநாயகன் ரிலீஸ் எப்போது? நொந்துபோய் எச் வினோத் சொன்ன பதில் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!











Click it and Unblock the Notifications