புதுவை: சோனியா உதவியை கோரும் ராமதாஸ்
திண்டிவனம்:
பாண்டிச்சேரி தொகுதியில் பாட்டாளி மக்கள் கட்சி வெற்றி பெறுவதற்கு சோனியா காந்தி உதவ வேண்டும் என்றுஅக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாமகவுக்கு காங்கிரஸ் எதிர்ப்பையும் மீறி புதுவை தொகுதிஒதுக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகம் மற்றும் புதுவை பகுதி காங்கிரஸார் கடும் அதிருப்தியில் உள்ளனர்.குறிப்பாக புதுவை பகுதி காங்கிரஸார் கொந்தளித்துப் போய்க் காணப்படுகின்றனர்.
அவர்கள் இருக்கும் நிலையைப் பார்த்தால் ஒருவர் கூட பாமகவுக்கு ஆதரவாக வேலை செய்ய மாட்டார்கள் என்றுதெரிகிறது. அதே நேரத்தில் அண்டர்கிரவுண்ட் வேலை செய்து பா.ம.கவுக்கு குழி பறிக்கவும் வாய்ப்புள்ளது.
இந் நிலையில் திண்டிவனம் அருகே தைலாபுரத்தில் உள்ள தனது பண்ணை வீட்டில் ராமதாஸ் செய்தியாளர்களிடம்பேசுகையில், பாண்டிச்சேரி எம்.பி தொகுதி தொடர்பாக நிலவும் பிரச்சனைகள் குறித்து காங்கிரஸ் தலைவர்சோனியா காந்திக்குக் கடிதம் எழுதியுள்ளேன். புதுவை தொகுதியில் பாமகவுக்கு காங்கிரஸ் முழுமையான ஆதரவுதர வேண்டும் என்று சோனியாவிடம் கோயுள்ளேன்.
நாட்டின் பிரதமராகும் முழுத் தகுதியும் சோனியாவுக்கு உள்ளது. அவர் வெளிநாட்டவர் என்ற விஷமப்பிரசாரத்தை மக்கள் நிராகத்து விடுவார்கள்.
தினமலர் நிாளிதழ் என்னைப் பற்றி அவதூறான செய்திகளை வெளியிட்டு வருகிறது. அப் பத்திரிக்கை மீதுசென்னை உயர்நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடரப்படும் என்றார்.
செய்தியாளர்கள் சந்திப்பின்போது தினமலர் நிருபர் மற்றும் புகைப்படக்காரரை பாமகவினர் உள்ளே அனுமதிக்கமறுத்து திருப்பி அனுப்பி விட்டனர்.
-
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்.. டீசல் விலை உயர்வு வேலையை காட்ட துவங்கியது! -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!











Click it and Unblock the Notifications