நீலகிரியில் சசிகலா போட்டியிட வாய்ப்பு
கோவை:
நீலகிரி தொகுதியில் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா போட்டியிடவிருப்பதாக, காங்கிரஸ் முன்னாள் மத்திய அமைச்சர் பிரபு சூசகமாக தெரிவித்துள்ளார்.
கோவையில் நிருபர்களுக்குப் பேட்டியளித்தபோது அவர் கூறியதாவது:
மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்டில் தேயிலைத் தோட்ட தொழிலாளர்களுக்கு முதலில் எந்தவித சலுகைகளும் அறிவிக்கப்படவில்லை. ஆனால் பட்ஜெட் முடிவடையும் தருவாயில், பச்சை தேயிலை கிலோவுக்கு ரூ.8 மானியம் அளிப்பதாகவும், இது 4 மாதங்களுக்கு அமலில் இருக்கும் என்றும் கூறியுள்ளார்.
நீலகிரி தொகுதியில் அதிமுக சார்பில் முதல்வர் ஜெயலலிதாவுக்கு மிக நெருக்கமான ஒருவர் வேட்பாளராக நிறுத்தப்பட இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனை மனதில் கொண்டுதான் மத்திய அரசு இந்த மானியத்தை அறிவித்துள்ளது. யார் நின்றாலும், இந்தத் தொகுதியில் காங்கிரஸ் வென்றே தீரும் என்று கூறினார்.
இந்தத் தொகுதியில் பலமுறை நின்று வென்றவர் பிரபு என்பது குறிப்பிடத்தக்கது. தனது பண பலத்தால் இந்த முறையும் இத் தொகுதியை அவர் பெற்றுவிடுவார் என்கின்றனர்.
அதே நேரத்தில் கடந்த தேர்தலில் பா.ஜ.க. வென்ற இந்த நீலகிரி தொகுதியை இம் முறை அக் கட்சிக்குக்து தர முடியாது என ஜெயலலிதா கூறிவிட்டதாக செய்திகள் வருகின்றன. அண்மைக் காலமாக மக்களவைத் தேர்தலில் சசிகலா போட்டியிடப் போவதாக செய்திகள் வரும் நிலையில் தோட்டத் தொழிலாளர்கள், பழங்குடியினர் அதிகம் வசிக்கும் இந்தத் தொகுதியை அவருக்கு ஜெயலலிதா தேர்வு செய்திருப்பதாக பிரபு ஆதரவாளர்கள் கருதுகின்றனர்.
-
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
"உண்மையை சொல்ல தைரியம் இல்லை".. ஜனநாயகன் ரிலீஸ் எப்போது? நொந்துபோய் எச் வினோத் சொன்ன பதில் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications