சொத்து குவிப்பு வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்ற கோரி ஜெ. மீண்டும் மனு
டெல்லி:
வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தன் மீது தொடரப்பட்ட வழக்கை கர்நாடகத்திலிருந்து வேறுமாநிலத்துக்கு மாற்றக் கோரி முதல்வர் ஜெயலலிதா உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் மனுத் தாக்கல் செய்துள்ளார்.
ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு தமிழகத்தில் நியாயமாக நடக்கவில்லை என்று கூறி, இதை வேறுமாநிலத்துக்கு மாற்றக் கோரி திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.அந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் வழக்கை பெங்களூருக்கு மாற்றக் உத்தரவிட்டது.
இதற்காக பெங்களூரில் சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட்டு, ஆவணங்களை கன்னடத்தில் மொழி பெயர்க்கும்பணியும் தொடங்கியது.
இந் நிலையில், காவிரி நீர்ப் பிரச்சனை, வீரப்பன் விவகாரம் காரணமாக கர்நாடகத்துக்கும், தமிழகத்திற்கும்இடையே உறவு சரியில்லை என்பதால் அங்கு வழக்கை நடத்தினால் தனக்கு நியாயம் கிடைக்காது, பாதுகாப்புஇருக்காது என்று கூறி வழக்கை பாண்டிச்சேரிக்கு மாற்ற வேண்டும் என்று ஜெயலலிதா உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.
இதற்கு கர்நாடகம் தாக்கல் செய்த பதில் மனுவில், விசாரணை நியாயமாக நடக்கும் என்று உத்தரவாதம் அளித்தது.
எனினும், காவிரிப் பிரச்சனை தொடர்பாக கர்நாடகத்தில் அவ்வப்போது பிரச்னை ஏற்படும் என்றும், குறிப்பாகஜனவரி, பிப்ரவரி மாதங்களில் பிரச்சனை அதிகமாக இருக்கும் என்றும் கூறியிருந்தது.
இதற்கு ஜெயலலிதா தரப்பில் இருந்து உடனடியாக பதில் ஏதும் தாக்கலாகவில்லை. இந் நிலையில் கடந்த வாரம்ஜெயலலிதாவை துணைப் பிரதமர் அத்வானி சந்தித்ததைத் தொடர்ந்து அதிமுக-பா.ஜ.க. கூட்டணி ஏற்பட்டது.அப்போது ஜெயலலிதா சில நிபந்தனைகளை விதித்ததாகக் கூறப்பட்டது.
இந் நிலையில், இன்று ஜெயலலிதா உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் ஒரு மனுத் தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில்,நான் என்ன கூறியிருந்தேனோ அதையேதான் கர்நாடக அரசும் கூறியுள்ளது. முன்பு ஒரு முறை மேனகா காந்திசம்பந்தப்பட்ட வழக்கில், ஒரு மாநிலத்தில் வழக்கை நடத்துவதற்கு அசாதாரணமான சூழ்நிலை இருந்தால் அந்தவழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்றலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது.
இப்போது என் வழக்கிலும் அத்தகைய சூழ்நிலைதான் உள்ளது. என் பாதுகாப்பு மட்டுமன்றி, சாட்சி சொல்லவருபவர்களின் பாதுகாப்பும் முக்கியமானது. எனவே இந்த வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்றுவதைத் தவிர வேறுவழியில்லை என்று கூறியுள்ளார்.
இந்த மனுவின் மீது வரும் 9ம் தேதி விசாரணை நடக்கவுள்ளது.
-
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications