வீரப்பன் கூட்டாளிகள் 4 பேருக்கு ஏப்.16ல் தூக்கு தண்டனை
பெங்களூர்:
உச்சநீதிமன்ற தீர்ப்புப்டி, வீரப்பன் கூட்டாளிகள் 4 பேருக்கு ஏப்ரல் 16ம் தேதி தூக்குத் தண்டனை நிறைவேற்ற மைசூர் மாவட்டமுதன்மை நீதிமன்ற நீதிபதி ஹெக்டே உத்தரவு பிறப்பித்தார்.
09-04-1993ம் தேதி பாலாறு அருகே நடந்த கன்னிவெடி தாக்குதலில் போலீஸார் 21 பேர் கொலை செய்யப்பட்டனர். இதுதொடர்பாக வீரப்பன் கூட்டாளிகள் சைமன், ஞானபிரகாஷ், மாதய்யா, பிவிலேந்திரா ஆகியோருக்கு ஆயுள் தண்டனை வழங்கிமைசூர் தடா நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இதனை எதிர்த்து நான்கு பேரும் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். இதனை விசாரித்த உச்ச நீதிமன்றம் 4 பேரின்ஆயுள் தண்டனையை தூக்கு தண்டனையாக மாற்றி தீர்ப்பளித்தது.
இந் நிலையில், 4 பேரையும் ஏப்ரல் 16ம் தேதி பெல்காம் மத்திய சிறையில் தூக்கிலிட மைசூர் மாவட்ட நீதிபதி ஹெக்டே உத்தரவுபிறப்பித்துள்ளார். மைசூர் மத்திய சிறையில் தூக்குத் தண்டனையை நிறைவேற்றும் இயந்திரம் பழுதடைந்துள்ளதால், பெல்காம்சிறைக்குத் தூக்குத் தண்டனையை மாற்றியுள்ளதாக அவர் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.
-
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
மாடு பலியிட தடை.. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்! அமைச்சர் ஷாஜஹான் உறுதி -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
"உண்மையை சொல்ல தைரியம் இல்லை".. ஜனநாயகன் ரிலீஸ் எப்போது? நொந்துபோய் எச் வினோத் சொன்ன பதில் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications