ராமதாஸ் கொடும்பாவி எரிப்பு வேண்டாம்: ரசிகர்களுக்கு ரஜினி உத்தரவு
சென்னை:
ரஜினிக்கு எதிராகப் பேசிய பா.ம.க. நிறுவனர் ராமதாசின் கொடும்பாவியை எரிக்க ஆரம்பித்துள்ளனர் ரஜினி ரசிகர்கள். இதையடுத்து கொடும்பாவி எரிப்பை உடனடியாக நிறுத்துமாறு ரசிசர்களுக்கு ரஜினி உத்தரவிட்டுள்ளார்.
ரஜினி ரசிகர்கள்- பா.ம.கவினர் மோதல் நாளுக்கு நாள் வலுத்து வருகிறது. தேர்தல் நெருங்க நெருங்க மோதல் அதிகரிக்கும் என்று கருதப்படுகிறது.
இதுவரை பா.ம.கவுக்கு எதிராக அறிக்கை, ராமதாசுக்கு எதிராக போஸ்டர்கள் ஒட்டி வந்த ரஜினி ரசிகர்கள் இப்போது ராமதாசின் கொடுப்பாவி எரிப்பில் இறங்கியுள்ளனர். ரஜினியைக் கேவலமாகத் திட்டிய ராமதாஸ் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அவர்கள் கூறி வருகின்றனர்.
ஆனால், தினமலர் பத்திரிக்கை தான் வேண்டுமென்றே ரஜினி குறித்து ராமதாஸ் பேசாததையையும் சேர்த்து வெளிட்டு பிரச்சனை கிளப்பியதாக பா.ம.க.வினர் கூறுகின்றனர். ரஜினி சேற்றில் விழுந்த பன்றி என்று ராமதாஸ் சொன்னதாக முதலில் செய்தி வெளியிட்டது தினமலர் தான் என்று கூறும் பா.ம.கவினர் அதை மறுத்து ராமதாஸ் அறிக்கை வெளியிட்டதையும் சுட்டிக் காட்டுகின்றனர்.
மேலும் அந்தப் பத்திரிக்கை மீது வழக்கு போடப் போவதாகவும் ராமதாஸ் கூறியுள்ளார்.
இந் நிலையில் ராமதாசே அவ்வாறு பேசவில்லை என்று மறுத்துவிட்ட பிறகு அவரது கொடும்பாவி எரிப்பு போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என ரசிகர்களுக்கு ரஜினி கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக தனது மன்றப் பொறுப்பாளர் சத்யநாராயணா மூலம் ரஜினி வெளியிட்டுள்ள அறிக்கை:
நாடெங்கும் சிறப்பா செயல்பட்டு வரும் ரஜினிகாந்த் ரசிகர் மன்ற நிர்வாகிகள், உறுப்பினர்களுக்கு ஒரு வேண்டுகோள்.
கடந்த 4ம் தேதி திருவண்ணாமலையில் ஒரு திருமண நிகழ்ச்சியில் பேசிய டாக்டர் ராமதாஸ் அவர்கள் ரஜினயை மிகவும் தரக் குறைவாகப் பேசிய செய்தி கண்டு நம் ரத்தம் கொதிக்கிறது. அதனை வெளிப்படுத்தும் வகையில் நீங்களும் பல வகையில் எதிர்ப்பைத் தெரிவித்தீர்கள்.
ஆனால், ராமதாஸ் அவர்களே ரஜினிகாந்த் பற்றி தரக் குறைவாகப் பேசவில்லை என்று மறுத்திருக்கிறார். பத்திரிக்கையில் வந்த செய்தியையும் மறுத்துள்ளார். இந் நிலையில் நீங்கள் அவரது கொடும்பாவி எரிப்பு போன்ற செயல்களில் ஈடுபட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
-
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
13 மாவட்டங்களில் பெண் கலெக்டர்கள்.. விஜய்யின் சிங்கப்பெண் ரூட்.. மாவட்டம்தோறும் அதிரடி -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது












Click it and Unblock the Notifications