கூட்டணி தலைவர்களுக்கு கருணாநிதி அளித்த டின்னர்!
சென்னை:
ஜனநாயக முற்போக்குக் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களுக்கு திமுக தலைவர் கருணாநிதி நேற்றிரவு விருந்தளித்தார்.
அண்ணா அறிவாலய வளாகத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில் இந்த விருந்து உபசாரம் நடந்தது.
காங்கிரஸ் தலைவர்களான ஜி.கே.வாசன், எஸ்.ஆர்.பாலசுப்ரமணியம், பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ்,தலைவர் ஜி.கே.மணி, மதிமுக அவைத் தலைவர் எல்.கணேசன், இந்திய கம்யூனிஸ்ட் செயலாளர் நல்லகண்ணு, மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் செயலாளர் வரதராஜன், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மாநிலத் தலைவர் அப்துல் காதர் ஆகியோர் இதில் கலந்துகொண்டனர்.
இரவு விருந்துக்கு முன்பாக கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டமும் நடந்தது. தேர்தல்உத்திகள் குறித்து இக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
பின்னர் கருணாநிதி செய்தியாளர்களிடம் பேசுகையில், போபர்ஸ் ஊழல் வழக்கிலிருந்து ராஜீவ் காந்தி விடுவிக்கப்பட்டுள்ளதுமகிழ்ச்சி தருகிறது. இது காங்கிரஸ் கட்சியின் மீதிருந்த களங்கத்தைத் துடைக்க உதவும்.
சோனியா காந்தியை வெளிநாட்டவர் என்று பா.ஜ.க.வினர் கூறிக் கொண்டிருப்பது தேவையில்லாதது. அவர்களதுவிஷமத்தனமான பிரசாரத்தை மக்கள் ஏற்க மாட்டார்கள் என்றார்.
-
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
"உண்மையை சொல்ல தைரியம் இல்லை".. ஜனநாயகன் ரிலீஸ் எப்போது? நொந்துபோய் எச் வினோத் சொன்ன பதில்












Click it and Unblock the Notifications