புதுவை கண்ணனுக்கு காங்கிரஸ் சமாதான கொடி
பாண்டிச்சேரி:
பாண்டிச்சேரி காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகியுள்ள கண்ணன் அவசரமாக டெல்லி புறப்பட்டுச் சென்றார்.
தேர்தல் நேரத்தில் அவரது விலகல் காங்கிரசுக்கு சரிவை ஏற்படுத்தலாம் என்பதால் அவரை சமாதானப்படுத்தும் முயற்சிகளில்அகில இந்திய பொதுச் செயலாளர் கமல்நாத் ஈடுபட்டுள்ளார். அவரது அழைப்பின் பேரிலேயே கண்ணன் டெல்லி சென்றுள்ளதாகதெரிகிறது.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியுடன் அவரை சந்திக்க வைக்கவும் முயற்சிகள் நடக்கின்றன.
காங்கிரசுக்கு பாண்டிச்சேரி எம்.பி தொகுதியை திமுக தராததைக் காரணம் காட்டி கட்சியிலிருந்து விலகியதாக கண்ணன்சொன்னாலும், முதல்வர் ராமசாமியுடனான பிரச்சனைகளே முக்கியக் காரணமாகக் கருதப்படுகிறது.
இதனால்தான் சில நாட்களுக்கு முன் ராமசாமியை சந்திக்காமலேயே திருப்பி அனுப்பினார் சோனியா காந்தி. இது கண்ணன்தரப்புக்கு உற்சாகம் தந்துள்ளதால், அவரை சமாதானப்படுத்திவிட முடியும் என காங்கிரஸ் நம்புகிறது.
கண்ணனுக்கு பா.ஜ.க. வலைவிரித்து வருவதால் இந்த சமாதான முயற்சிகள் நடக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
கண்ணனின் ஆதரவாளரும் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தவருமான லட்சுமி நாராயணனும் உடன் சென்றுள்ளர்.இதற்கிடையே பதவி விலகிய லட்சுமி நாராயணன் மற்றும் ஏழுமலை ஆகியோரின் ராஜினாமா கடிதங்களை ஏற்க வேண்டாம்என்றும் முதல்வர் ரங்கசாமிக்கு சோனியா காந்தி உத்தரவிட்டுள்ளார்.
-
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
மாடு பலியிட தடை.. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்! அமைச்சர் ஷாஜஹான் உறுதி -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications